சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Aug 2015

காலே தோல்விக்கு கொழும்புவில் பழி தீர்த்தது இந்தியா !

கொழும்பு நகரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து 393 ரன்களை குவித்தது. முதல் இன்னிங்சில் ராகுல் சதமடித்தார். தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 306 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 325 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ரஹானே 126 ரன்களை அடித்தார். தொடர்ந்து 413 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இலங்கை அணி களமிறங்கியது.

4வது நாளான நேற்று இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களை எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினர். இதனை சமாளிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் வரிசையாக விக்கெட்டை பறிகொடுத்தனர். கருணரத்னே ( 46)சங்ககாரா (18) மேத்யூஸ் ( 23) சண்டிமால் (15) ரன்களில் அவுட் ஆனார்கள். முபாரக், பிரசாத் ஆகியோர் டக் அவுட் ஆனார்கள். கவுஷால் 5 ரன்களில் வெளியேறினார்.
கடைசியில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 134 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும் மிஷ்ரா 3 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
காலே நகரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்தது. தற்போது கொழும்பு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் தொடர் 1-1 என்று சமனடைந்துள்ளது. ஆகஸ்ட் 28ஆம் தேதி 3வது டெஸ்ட் போட்டித் தொடங்கவுள்ளது. 



No comments:

Post a Comment