சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Aug 2015

விவசாயிகளின் நிலம் ராஜீவ் அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளது: ஸ்ம்ரிதி இரானி குற்றச்சாட்டு!

அமேதியில் சைக்கிள் தொழிற்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு விற்கப்பட்டு உள்ளது என்று மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி குற்றஞ்சாட்டி உள்ளார்.

மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி அமேதியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''நிலம் கையகப்படுத்தும் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை என்றும் விவசாயிகளின் ஒரு அங்குல நிலத்தை கூட எடுக்கவிடமாட்டோம் என்று ராகுல்காந்தி கூறி உள்ளார். ஆனால் அவர் விவசாயிகளின் நிலத்தை ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு கையகப்படுத்தி இருக்கிறார். நிலம் கைமாறியதை ஆதாரத்துடன்தான் தெரிவிக்கிறேன். இதற்கான தஸ்தாவேஜுகள் இருப்பதால் இந்த நிலம் கைமாறிய விவகாரம் வெளிப்படையாக இருக்கிறது.


அமேதி தொகுதியில் கடந்த 1980 ஆம் ஆண்டு சைக்கிள் தொழிற்சாலை அமைப்பதற்காக 65 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருந்தது. அந்த நிலத்தில் சைக்கிள் தொழிற்சாலை தொடங்கப்பட்டு விட்டதா? அதில் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது? அந்த நிலம் என்ன ஆனது? என்பதற்கு விடை கிடைத்துள்ளது.

அமேதியில் சைக்கிள் தொழிற்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட 65 ஏக்கர் விவசாய நிலமானது, தற்போது ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இந்த விற்பனை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி நடந்துள்ளது. இதை ஆதாரம் இல்லாமல் நான் கூறவில்லை. ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு விற்பனை செய்யப்பட்டதற்கான பத்திரப்பதிவு ஆதாரத்துடன் தான் நான் குற்றம்சாட்டுகிறேன்.

காங்கிரஸ் கட்சியின் 60 ஆண்டுகால ஆட்சியில், அமேதி தொகுதியில் எந்தவிதமான அடிப்படை வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் நடக்காத வளர்ச்சி பணிகள், பிரதமர் நரேந்திர மோடியின் ஓர் ஆண்டு ஆட்சியில் அமேதியில் நடந்து வருகிறது" என்றார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது ஆகும். அந்த நிலம் சட்டப்படி தான் வாங்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி மறுத்து உள்ளது.



No comments:

Post a Comment