சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, "அட்டக்கத்தி", "மெட்ராஸ்" இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் படம் "கபாலி".கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்த டைட்டில் சமூக வளைதளங்களில் வைரலானது ."டிவிட்டரில்" இந்திய ட்ரெண்டிலும் வந்தது...
சில தினங்களுக்கு முன் "AVM " ஸ்டுடியோவில் இந்த படத்திற்கான "போட்டோ சூட்" நடைபெற்றது...மிகுந்த கட்டுப்பாடுடன் கெட்ட-அப் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக மிக ரகசியமாக போட்டோ சூட் நடைபெற்றது.இருப்பினும் உள்ளிருந்த ஒரு சிலர் "கெட்ட- அப் " பற்றி வெளியே நியூஸ் பரப்பி வருகின்றனர்.
"கபாலி" படத்தில் சூப்பர் ஸ்டாரின் கெட்டப் "சால்ட் ,பெப்பர் "மற்றும் "ஐவரி"கலரில் "ஹேர் ஸ்டைல்" தாடி, கிட்டதட்ட "20 வருடங்களுக்கு முன் வெளியான "தர்மதுரை " படத்தின் கெட்ட-அப் மாதிரி இருக்குமென சொல்லப்படுகிறது இந்த படத்திற்கு பிரபல ஹிந்தி படத்தின் மேக்க-அப் ஆர்ட்டிஸ்ட் தான் இந்த படத்திற்கு மேக்க-அப் மேன்.
நடிகை ராதிகா ஆப்தேவும் 1980ம் ஆண்டுக்கான கெட்-அப்பில்தான் இருந்ததாக கூறப்படுகிறது..நடிகை தன்ஷிகா ரஜினிக்கு மகளாக நடிக்க, "அட்டக்கத்தி" தினேஷ் மகனாக நடிக்கிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது. செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இந்த படத்திற்கான "First Look " வெளியிடப்படுமாம்.
No comments:
Post a Comment