சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Aug 2015

கண்தானத்திற்கு வழிகாட்டிய ஒரு 'ப்ளைண்ட் வாக்!'

தானத்தில் சிறந்த தானம் எது என்று கேட்டால், நம் எல்லோரும் கண் தானம் என்று யோசிக்காமல் சொல்லி விடுவோம்.
ஆனால் சிலர்  தானம் செய்வதற்கே யோசிப்பார்கள். அப்படிபட்ட யோசனையாளர்களுக்காகவே மதுரையில் இன்று ஒரு வித்தியாசமான நடை பயனம் நடந்தது. நடை பயனத்தில் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா? வித்தியாசம் இருக்கு, கண் தானத்துக்கான  விழிப்புணர்வு நடை பயனத்தில் பங்கேற்ற எல்லோரும் தங்கள் கண்களை கருப்பு துணி கொண்டு கட்டிக் கொள்ள, அவர்களை முன் நின்று வழி நடத்தி சென்றதே பார்வையற்றோர்தான்.
ஆம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக, ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை,  "தேசிய கண் தான இருவார விழா" இன்று தொடங்கியது,இந்த விழாவின் தொடக்கமாக இன்று காலை 9 மணிக்கு அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து அரவிந்த் கண் மருத்துவமனை வரை  "ப்ளைண்ட் வாக்" என்று ஒரு வித்தியாசமான நடை பயணம் நடந்தது.


இந்த நடை பயணத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் இள.சுப்ரமணியன் கொடி அசைத்து தொடங்கி வைத்ததோடு மட்டும் இல்லாமல், பொது மக்களோடும் அரவிந்த் கண் மருத்துவமனை ஊழியர்களோடும் சேர்ந்து, தன்னுடைய கண்களை கருப்பு துணியால் மூடிக் கொண்டு, நடை பயணத்தில் கலந்து கொண்டார். இவர்கள் அனைவரையும் பார்வையற்றவர்கள் முன் நின்று கை பிடித்து கூட்டி சென்றார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட  இந்த நடை பயணத்தின் மூலமாக மக்களிடையே கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த "ப்ளைண்ட் வாக்" பற்றி அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கினைப்பாளர்கள் கூறுகையில், "இது இரண்டு வாரம் நடக்கக் கூடிய தேசிய கண் தான இருவார விழா. மதுரை மட்டுமின்றி, விருதுநகர், திண்டுக்கல்,தஞ்சாவூர்,கும்பகோணம் போன்ற ஊர்களிலும் இந்த விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் ஏற்கனவே கண்தானம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு மரியாதை செய்யப்பட உள்ளது. விழாவின் இறுதி நாளில், கும்பகோணத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்கும் மிக பெரிய நடை பயணம் நடக்க இருக்கிறது.பார்வையற்றோரின் கஷ்டங்களை அறிந்து, பொது மக்கள் அனைவரும் கண் தானம் அளிக்க வேண்டும் என்பதே இந்த நடை பயனத்தின் முக்கிய குறிக்கோள்" என்றார்.
"எடுப்பதற்கு  ஒண்ணும் இல்ல.. கொடுப்பதற்கும் ஒண்ணும் இல்லனு யாருமே நினைக்கக்கூடாது, ஏன்னா கொடுப்பதற்கு நிறையவே இருக்கு. எனக்கு கண் இல்ல, ஆனா உடல் உறுப்புகள் இருக்கு என்னால அத கொடுக்க முடியும். அதுனால நான் என் உடல் உறுப்புகளை தானம் பண்ணிட்டேன்னு" சொல்லி நம்மிடம் இந்த நடை பயனத்தின் அனுபவத்தை பற்றி கூற தொடங்கினார் பார்வையற்ற பிரகாஷ்.
,"இன்னிக்கு இந்த நடை பயணம் மூலமா பல பேர் கண் தானம் செய்ய முன் வந்திருக்காங்கனு நினைக்கிறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. அது மட்டும் இல்லாம, இத்தன நாள் என்ன போல பார்வையற்றவர்களுக்கு உதவிய பொது மக்களுக்கு இன்னைக்கு நாங்க உதவியிருக்கோம், எங்க கைய புடிச்சு கூட்டிட்டு போனவங்கல , இன்னிக்கு நாங்க கைய புடிச்சு கூட்டிட்டு போய் அவங்களுக்கு கைமாறு செஞ்சுட்டோம்னு" ரொம்ப மகிழ்ச்சியோடு கூறினார்.



No comments:

Post a Comment