சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Aug 2015

236 ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த குப்தில்- லாதம் ஜோடி!

ருநாள் போட்டியில், 236 ரன்களை ஒரு விக்கெட் கூட இழக்காமல்  சேஸ் செய்து  நியூசிலாந்து அணி புதிய சாதனையை படைத்துள்ளது. நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் குப்தில் 116 ரன்களும், லாதம் 110 ரன்களும் அடித்து இந்த புதிய சாதனை நிகழ்த்தினர்.

முதல் ஒருநாள் போட்டியில்,  நியூசிலாந்து அணி நிர்ணயித்த 303 ரன்களை ஜிம்பாப்வே அணி சேஸ் செய்து எளிதாக வெற்றி பெற்றது. ஹராரே நகரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி, 235 ரன்களை எடுத்தது. இதனை நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களே அடித்து முடித்து விட்டனர். இதனால் நியூசிலாந்து அணி,  10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒருநாள் போட்டியில் ஒரு ஜோடி, 236 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது இதுவே முதல் முறை ஆகும். இதில் மார்ட்டின் குப்தில் 11 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 116 ரன்களையும், லாதம் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 110 ரன்களையும் எடுத்தனர். இதற்கு முன் கடந்த 2011ஆம் ஆண்டு,  உலகக் கோப்பை போட்டியில், இலங்கை அணி இங்கிலாந்து அணி நிர்ணயித்த 231 ரன்களை ஒரு விக்கெட் கூட இழக்காமல் வெற்றி பெற்றது சாதனையாக இருந்தது.

No comments:

Post a Comment