சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Aug 2015

நன்றாகத் தமிழ் தெரிந்த மகேஷ்பாபு தமிழில் டப்பிங் பேசாதது ஏன்?

மகேஷ்பாபு ஸ்ருதிஹாசன் நடித்த ஸ்ரீமந்துடு படம் தெலுங்கில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதேநாளில் தமிழில் செல்வந்தன் என்கிற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.

மகேஷ்பாபு இதுவரை சுமார் முப்பதுபடங்களில் நடித்திருந்தபோதும், ஒரேநேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாவது இதுவே முதன்முறை. மகேஷ்பாபு சென்னையில் படித்தவர் என்பதால் நன்றாகத் தமிழ் பேசக்கூடியவர். ஆனாலும் இப்போது வெளியாகவிருக்கும் செல்வந்தன் படத்துக்கு அவர் பேசவில்லை. 

கொடைக்கானல் உட்பட சில படங்களில் நடித்திருக்கும் சேகர் என்பவர் அவருக்காகக் குரல் கொடுத்திருக்கிறார். ஏன் அப்படி? என்று கேட்டால், தெலுங்கில் வெளியாகும் அதேநாளில் தமிழிலும் வெளியிடலாம் என்கிற முடிவையே மிகவும் தாமதமாகத்தான் எடுத்தோம், மகேஷ்பாபு வேறேரு படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு போய்வந்த தெலுங்கில் டப்பிங் பேசவே நாட்கள் சரியாக இருந்தன. 

எனவே தமிழில் பேச அவர் விரும்பினாலும் பேசமுடியாமல் போய்விட்டது. அடுத்தமுறை கண்டிப்பாகத் தமிழிலும் நானே பேசுகிறேன் என்று சொல்லியிருக்கிறார் என்கிறார் செல்வந்தன் படத்தைத் தமிழில் வெளியிடும் ராஜராஜா.



No comments:

Post a Comment