சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Aug 2015

சிம்புவின் கான் படம் பற்றிய ரகசியங்களை உடைத்த ஜகபதிபாபு!

மகேஷ்பாபு , ஸ்ருதி ஹாசன், ஜெகபதிபாபு உட்பட பலர்  நடிப்பில் தமிழில் வெளியாகவிருக்கும் படம் செல்வந்தன். இப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஜெகபதிபாபு,  தான் நடிக்கும் கான் படம் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, டாப்ஸி, காத்ரீன் தெரஸா, ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் கான். இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

இப்படத்தில் சிம்பு முருக பக்தராக நடிக்கிறார். மேலும் கான் என்றால் காடு என்று அர்த்தம். முக்கிய  காட்சிகள் சிலவற்றைக் காட்டுக்குள் படமாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், டாப்ஸி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் ஏற்கெனவே வெளிவந்தன. 

நேற்று நடைபெற்ற செல்வந்தன் பட செய்தியாளர் சந்திப்பில் கான் படத்தின் சில ரகசியங்களை ஜகபதி பாபு கூறும்போது, “ குடி, புகைப்பழக்கம், கெட்ட குணம் என்று கெட்ட வழியில் சென்றதால் “ரா” அதிகாரியான நான் வேலையிலிருந்து நீக்கப்படுகிறேன்.  இன்னொரு அதிகாரியான சிம்புவுக்கும் எனக்குமான போராட்டமே கான்” என்றார் ஜகபதிபாபு.



No comments:

Post a Comment