ரஜினி படத்தின் பெயர் கபாலி என்று அறிவித்ததும் சிக்கல் தொடங்கிவிட்டது. அதேபெயரில் ஒருபடம் தயாராகிக்கொண்டிருக்கிறது. அந்தப்படத்தின் பாடல்வெளியீடு நடந்துமுடிந்துவிட்டது. படப்பிடிப்பும் இப்போது இறுதிக்கட்டத்தில் இருக்கிறதென்று சொல்லப்படுகிறது.
அப்படியிருக்கும்போது அது தெரியாமல் ரஜினி படத்துக்கு இந்தப்பெயரை வைத்தது எப்படி? அதுவும் படத்தின் தயாரிப்பாளர் தாணு தயாரிப்பாளர்சங்கத்தின் தலைவராக இருக்கும்போது இப்படி நடந்தது எப்படி? என்கிற வியப்பு எல்லோருக்கும் இருக்கிறது.
இதைப் பற்றி கலைப்புலிதாணுவிடம் கேட்டால், எங்கள் படத்துக்கு கபாலி என்று பெயர் வைக்கலாம் என்று முடிவுசெய்தவுடன், தயாரிப்பாளர்கள்சங்கம், சேம்பர், கில்டு அகிய எல்லா இடங்களிலும் விசாரித்துப்பார்த்தோம், ஓப்பனாகத்தான் இருந்தது. அதனால் நாங்கள் வைத்துவிட்டோம்.
அதன்பின்னர்தான் இப்படி ஒருபடம் இருப்பது தெரியவந்தது. ஆனால் இதுவரை அந்தப்படம் சம்பந்தப்பட்ட யாரும் எங்களைத் தொடர்புகொள்ளவில்லை என்றாலும் இப்படி நடந்தது வருத்தத்துக்குரிய விசயம்தான் என்கிறார். இந்தச்சிக்கலை எப்படிச் சரிசெய்வது என்று பேசிக்கொண்டிருப்பதாகவும் தகவல்.

No comments:
Post a Comment