சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Aug 2015

கபாலி பெயருக்கு உரிமை கொண்டாடும் புதியவர்,தொடங்கியது பஞ்சாயத்து?

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் கபாலி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தவுடனே சிக்கலும் வந்துவிட்டது. மைசூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் பெயர் கபாலிதானாம்.


கதாநாயகியாக காவ்யா என்பவர் நடிக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் அந்தப்படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரே தயாரிப்பு என்பதால் பணம் கிடைக்கும்போதெல்லாம் படப்பிடிப்பு நடக்கிறது என்கிறார்கள். தொண்ணூறு சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் அந்தப்படத்துக்கு கடந்த ஒரு மாதம் முன்புகூட சென்னையில் படப்பிடிப்பு நடந்திருக்கிறதென்கிறார்கள்.

சிவாபிக்சர்ஸ் என்கிற பெயரில் கில்டில் இந்தப்பெயர் பதிவு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. முறைப்படி அவர் அந்தப்பெரை புதுப்பிக்கவில்லை என்று சொல்லி அந்தப்பெயரை ரஜினி படத்துக்குக் கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 

இது தொடர்பாக அந்த சிவக்குமாரிடம் கேட்டால், நான் பல இலட்சங்கள் செலவு செய்து படமெடுத்துக்கொண்டிருக்கிறேன், ஐநூறுரூபாய் கட்டி ரினியுவல் செய்யமாட்டேனா? நான் ரினியுவல் செய்யப்போகும்போதெல்லாம் அதை ஏற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டனர், இப்போது எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை என்கிறார். 

பெயர் வைத்ததுமே இப்படி ஒரு பஞ்சாயத்து வரும் என்று ரஜினி நினைத்திருக்கமாட்டார்.No comments:

Post a Comment