சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Aug 2015

வெள்ளை மாளிகை அதிகாரியாக முதல்முறையாக திருநங்கையை நியமித்தார் ஓபாமா!

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் அதிகாரியாக முதல்முறையாக திருநங்கையை அதிபர் ஒபாமா நியமித்து உள்ளார்.

அமெரிக்க அதிபர் மாளிகையின் பணியாளர் தேர்வு இயக்குநராக ரஃபி பிரீட்மேன்-குர்ஸ்பேன் என்ற திருநங்கை நேற்று நியமிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்க அதிபர் மாளிகையில், அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள முதல் திருங்கை இவரே ஆவார். ரஃபி, இதற்கு முன்பு திருநங்கைகளின் சமத்துவத்துக்கான தேசிய மைய ஆலோசராக பணியாற்றியவர்.

திருநங்கைகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக ரஃபி பிரீட்மேன்-குர்ஸ்பேன் உறுதி பூண்டிருப்பதற்கு, ஒபாமா அரசு மதிப்பளிக்கிறது என்பதை இந்த நியமனம் பிரதிபலிக்கிறது என்று வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் வலேரி ஜாரெட் கருத்து தெரிவித்து உள்ளார்.

மேலும், ரஃபி பிரீட்மேன்-குர்ஸ்பேனின் நியமனம், மூன்றாம் பாலின சமூகத்திற்கு ஒரு முக்கிய நிகழ்வு என்றும், அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றுகிறது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இது உள்ளது என்றும் வழக்கறிஞர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.



No comments:

Post a Comment