நல்லதும் இல்லை, (ராஜபக்சே அளவுக்கு) கெடுதலும் இல்லை'- இப்படித்தான் இலங்கை பிரதமராக வரக்கூடிய ரணில் விக்கிரம சிங்கவின் வெற்றி அங்குள்ள தமிழர்களால் பார்க்கப்படுகிறது.
இதற்கு முன் தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அதிபர் சிறிசேனாவால் தமிழர்கள் வாழ்வு மலரவும் இல்லை- வசந்தமும் வீசவில்லை.
தாங்கள் நீண்ட நெடுங்காலமாக அனுபவித்து வரும் அரசியல் சட்டத்திற்குப் புறம்பான பாகுபாடு மற்றும் மனிதநேயமின்மை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பெரிதும் நம்பியே இலங்கைத் தமிழர்கள் சிறிசேனவுக்கு விரும்பி வாக்களித்தார்கள்.
தேர்தலின் போது சிறிசேனாவும், அவருடைய கூட்டணிக் கட்சியினரும் அளித்த வாக்குறுதிகளைத் தமிழர்கள் உண்மையிலேயே நம்பினார்கள். தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து ராணுவம் திரும்பப் பெறப்பட்டு விடுமென்றும், ராணுவத்தினரும், சிங்களர்களும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் வீடுகளை திரும்பப் பெற்று விடலாமென்றும், இனியும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்பட மாட்டார்கள் என்றும், சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் கூடிய அமைதியான வாழ்வுக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும்,
முப்பதாண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வரும் இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது திருத்தம், நேர்மையான முறையில் அமலுக்குக் கொண்டு வரப்படுமென்றும், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறுமென்றும் தமிழர்கள் பேராவலுடன் எதிர்பார்த்தார்கள். இது எதுவும் நடக்கவில்லை.
தமிழர்கள் துயரம் தொடர்கிறது. இந்த நிலையில் ரணிலின் வெற்றி தமிழர்களுக்கு பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஒன்று, ராஜபக்சே வெற்றி அடைந்து இருந்தால் இனவாதம் இன்னும் மேலோங்கி இருக்கும்.
இந்த நிலையில் ரணிலின் வெற்றி, இலங்கை தமிழர்களுக்கு வாழ்வில் வளம் கொடுக்காவிட்டாலும் அவர்கள் உயிரோடு வாழவாவது முடியும் என்ற அளவில் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

No comments:
Post a Comment