சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Aug 2015

தேசிய கைத்தறி முத்திரையை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி!

தரமான கைத்தறி என உத்தரவாதம் அளிக்கும் தேசிய கைத்தறி முத்திரையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். 
சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் கைத்தறி நெசவாளர் விழா இன்று தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ரோசய்யா உள்ளிட்டோருக்கு கைத்தறி ஆடைகள் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தரமான கைத்தறி என உத்தரவாதம் அளிக்கும் தேசிய கைத்தறி முத்திரையை பிரதமர் அறிமுகம் செய்து வைத்தார்.  பின்னர், சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகளை, பிரதமர் மோடி வழங்கினார்.


மேலும், ஆகஸ்ட் 7ஆம் தேதியை தேசிய கைத்தறி தினமாக இன்றைய விழாவில் நரேந்திர மோடி அறிவிக்கிறார். 

முன்னதாக, இந்திய அளவில் நெசவாளர்களின் கைத்தறி படைப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பிரதமர் பார்வையிட்டார்.


இதனிடையே, சென்னை வருகை மகிழ்ச்சியளிப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திரமோடி  தெரிவித்திருந்தார். மேலும் சென்னையில் தமக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.



No comments:

Post a Comment