சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Aug 2015

இலங்கையில் ஒரு பிராட் : 4 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை அள்ளினார் இஷாந்த் சர்மா!

ந்திய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் அணி 10 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்த 5  விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா அள்ளினார். 

கொழும்புவில் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். எனினும் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், ராகுல் கைகொடுத்ததால் இந்திய அணி கவுரவமான ரன்களை எட்டியது.
டாஸ் வென்ற  இலங்கை கிரிக்கெட் வாரிய அணி கேப்டன் திரிமண்ணே, இந்திய அணியை முதலில் பேட் செய்ய கேட்டுக்கொண்டார். தொடக்க வீரர்களாக கே.எல்.  ராகுல், ஷிகர் தவான் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும்  108 ரன்கள் சேர்த்தனர். ராகுல் 43 ரன்களில் கமகே பந்தில், குணதிலகவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா, வெறும் 7 ரன்களை எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் விராட் கோலி, 8 ரன்கள் எடுத்து வெளியேற, இந்திய அணி திணறத் தொடங்கியது. அடுத்து ஜோடி சேர்ந்த ரஹானே, புஜாரா ஜோடி இலங்கை வீரர்களின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு, ரன்களை சேகரிக்கத் தொடங்கியது.ரஹானே 109 ரன்களும் புஜாரா 42 ரன்களும் அடித்தனர். இந்திய அணி முதன் இன்னிங்சில் 351 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இதனைத் தொடர்ந்து இலங்கை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் தனஞ்சயா டி சில்வா மற்றும் கவுசல் சில்வா ஆகியோர் ரன் எதுவும் எடுக்காத நிலையில்  இஷாந்த் சர்மா விக்கெட்டை கழற்றினார். அடுத்து திரிமண்ணே 5 ரன்களில் இஷாந்தின் பந்துவீச்சில் வெளியேறினார்.
உபுல் தாரங்கா, பெரைரா ஆகியோரும் டக் அவுட் ஆனார்கள். இலங்கை அணி 10 ரன்களை எட்டுவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்த 5 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மாதான் வீழ்த்தினார். இஷாந்த் சர்மா 21 பந்துகள் வீசி  5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து  5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.No comments:

Post a Comment