சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Aug 2015

ஒரு உயிரை காப்பாற்றவே இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுதினேன்: சுஷ்மா விளக்கம்

"லலித் மோடியை காப்பாற்றுவதற்காக இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுதவில்லை. ஒரு இந்திய பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதற்காகவே கடிதம் எழுதினேன்" என்று  வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம் அளித்துள்ளார். 

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித்மோடிக்கு விசா வழங்க உதவி செய்ததாக கூறி,  வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலகக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. 

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவையில் இன்று விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,  "என்னைப் பற்றி வெளியிடப்பட்ட அவதூறு தகவல்கள் குறித்து இரு அவைகளிலும் விவாதிக்க விரும்புகிறேன். தற்போது எதிர்க்கட்சிகள் அவைக்கு வராததை சாதகமாக எடுத்துக் கொள்ளவில்லை. எனது தரப்பு நியாயங்களையும், விளக்கங்களையும் முன்வைக்க வாய்ப்பு தராதது நியாமற்றது. ஊடகங்கள் என்னிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க எனக்கு வாய்ப்பு தாருங்கள். 2 வாரங்கள் கடந்து விட்டன. இதுவரை எந்த விவாதமும் நடைபெறவில்லை. விவாதத்திற்கு வாய்ப்பு கிடைப்பதற்காக காத்திருக்கிறேன். 
விசா விவகாரத்தில் லலித்மோடிக்கு நான் உதவவில்லை. லலித்மோடி விவகாரத்தில் என் மீதான புகார்கள் அடிப்படை ஆதாரமற்றவை. லலித்மோடிக்கு விசா வழங்கியது இங்கிலாந்து அரசு எடுத்த முடிவு. இங்கிலாந்து அரசின் முடிவுகளில் என் பங்கு எதுவுமில்லை. மனிதாபிமான அடிப்படையிலேயே பிரிட்டன் அரசிற்கு கடிதம் எழுதினேன். லலித் மோடியை காப்பாற்றுவதற்காக அல்ல. ஒரு இந்திய பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதற்காக.

கடந்த 10 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் லலித் மோடியின் மனைவிக்கு போர்ச்சுகல்லில் சிகிச்சை கிடைக்கத்தான் கடிதம் எழுதினேன். ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்ற உதவியது குற்றம் என்றால், நான் அந்த குற்றம் செய்ததை ஒப்புக் கொள்கிறேன். அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறியதாலேயே அந்த கடிதத்தை எழுதினேன்" என்று விளக்கம் அளித்தார்.



No comments:

Post a Comment