சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Aug 2015

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தவான் திடீர் விலகல்!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.
 

இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய தவான், முதல் இன்னிங்சில் 134 ரன்னும், இரண்டாவது இன்னிங்சில் 28 ரன்னும் எடுத்தார்.

இந்நிலையில், காயம் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகுவதாக ஷிகர் தவான் திடீரென இன்று அறிவித்துள்ளார்.

காயம் காரணமாக மற்ற இரண்டு போட்டிகளில் விளையாட போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தவானின் இந்த திடீர் முடிவு இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment