நடிகர்சங்கத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாத நிலையிலும் விஷால் அணியினர் பரபரப்பாகத்தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஸ்டார்நடிகர்களை நேரில் சென்று பார்த்து ஓட்டு சேகரிப்பில் இறங்கினர்.
நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் இன்று காலை ரஜினியை நேரில் சந்தித்து அவரிடம் ஆதரவு கேட்டனர். அப்போது, “ தேர்தல் நேரத்தில் நான் மலேசியாவில் கபாலி படத்தின் படப்பிடிப்பில் இருப்பேன், இருந்தாலும் ஓட்டுப்போட கண்டிப்பாக வருவேன் என்று ரஜினி சொல்லியிருக்கிறார்.
ரஜினியைச் சந்தித்த கையோடு இந்த ஐவரணி அப்படியே கமலைச் சந்திக்கச் சென்றது. கமல் இருந்த படப்பிடிப்புக்கு அருகிலேயே குஷ்பு ஷூட்டிங்கில் இருந்ததால் அவரையும் நேரில் சந்தித்து ஆரதவு கோரினர். அப்போது குஷ்பு, என் ஓட்டு விஷாலுக்குத் தான்” என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment