சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Aug 2015

ரஜினி பட டைட்டில் பாபிசிம்ஹா படத்திற்குக் கிடைத்தது எப்படி?

சூதுகவ்வும், ஜிகர்தண்டா என்று தொடர் வெற்றிக்குப் பிறகு ஹீரோவாக அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார் பாபிசிம்ஹா. கோ 2, பாம்புச்சட்டை, உறுமீன், கவலைவேண்டாம் உள்ளிட்ட படங்களில் பிஸியாகவிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து அடுத்து நடிக்கவிருக்கும் படம் வீரா. 1994ல் ரஜினி, மீனா, ரோஜா நடிப்பில் பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் வீரா. அப்படத்தின் டைட்டிலைத் தான் பாபிசிம்ஹாவின் அடுத்த படத்துக்கு வைத்திருக்கிறார்கள். 

இந்தப்படத்தின் கதைக்கு வீரா என்கிற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று இயக்குநர் சொன்னதும், பஞ்சு அருணாசலத்தை சந்தித்து கதையைக் கூறியிருக்கிறார் தயாரிப்பாளர். கதை பிடித்ததால், பெயரைத்தர உடனே ஓகே சொல்லிவிட்டாராம் பஞ்சு அருணாசலம். அதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். 

வீரா, ஆக்‌ஷன் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகவிருக்கிறதாம். அறிமுக இயக்குநரான  கே.ராஜாராமன் இப்படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மெண்ட் நிறுவனத்திற்காக இயக்குகிறார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உள்ள, கவலைவேண்டாம், கோ 2 ஆகிய படங்களீல் ஏற்கெனவே நடித்துக்கொண்டிருக்கிறார் பாபிசிம்ஹா. ஒரு தயாரிப்புநிறுவனத்தின் மூன்று படங்களில்  ஒரே நேரத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment