சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Aug 2015

வாகனம் விபத்து: இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்வது எப்படி?

சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகிவிட்டால்,

1. முதலில் நீங்கள் இன்ஷூரன்ஸ் செய்துள்ள நிறுவனத்துக்கு போன் மூலம் தெரியப்படுத்திவிடுங்கள். அதற்கு முன்னர் ஏதேனும் காயங்களோ, உயிர்ச் சேதமோ ஏற்பட்டால் முதலில் மருத்துவமனையையும் பின்னர் காவல்துறையையும் அணுகுங்கள்.
2. அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் நீங்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள சர்வீஸ் ஸ்டேஷனின் முகவரியைப் பரிந்துரைக்கும்.அந்த சர்வீஸ் ஸ்டேஷனிலோ அல்லது நீங்கள் வழக்கமாக சர்வீஸுக்கு விடும் இடத்திலோ வாகனத்தை விட்டுவிடலாம்.
  

  
3. சர்வீஸ் ஸ்டேஷனில் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் விண்ணப்பம் கேட்டு வாங்கி, விபத்து நடந்த விவரத்தை பூர்த்தி செய்து விண்ணப்பித்து விடுங்கள். அங்குள்ளவர்கள் சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு அதனைத் தெரிவிப்பார்கள். அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து மதிப்பீட்டாளர் ஒருவர் 24 மணி நேரத்துக்குள் வந்து வாகனத்தைப் பார்வையிடுவார்.

4. அப்போது, மதிப்பீட்டாளரிடம் உங்களுடைய வாகனத்தின் ஒரிஜனல் ஆர்.சி, இன்ஷூரன்ஸ் பாலிசி, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றைக் காண்பிக்க வேண்டும். மேலும், விபத்தில் ஏதேனும் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருப்பின் அது தொடர்பாக காவல்துறையிலிருந்து பெற்ற எஃப்ஐஆர் நகலையும் கொடுக்க வேண்டும்.

5. வாகனத்தைப் பழுது பார்க்க ஆகும் செலவு விவரங்களை சர்வீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்தவர்கள் இன்ஷூரன்ஸ் மதிப்பீட்டாளரிடம் கொடுப்பார்.

6. மதிப்பீட்டாளர் அந்தச் செலவு விவர பட்டியலையும்; வாகனத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து, இரண்டும் பொருந்தும் பட்சத்தில் வாகனத்தின் பாகங்களைப் புதுப்பிக்க ஒப்புதல் அளிப்பார்.

7. வாகனம் சரி செய்யப்பட்ட பின்னர், மதிப்பீட்டாளருக்கு விவரம் தெரிவிக்கப்படும். அவர் வந்து வாகனத்தின் புதுப்பிக்கப்பட்ட பாகங்களைப் புகைப்படம் எடுத்துக்கொள்வார். பிறகு அவரிடம் செலவு தொகைக்கான பில் அளிக்கப்படும்.

8. அவர் அந்த பில்லை சரிபார்த்து லையபிலிட்டி எனும் இன்ஷூரன்ஸ் செட்டில்மென்ட் ஆவணத்தைத் தயார் செய்து சம்பந்தப்பட்ட சர்வீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைப்பார்.

9. சர்வீஸ் ஸ்டேஷனில் இன்ஸூரன்ஸில் க்ளெய்ம் ஆன தொகையையும் மற்றும் வாகனத்தின் உரிமையாளரான நீங்கள் செலுத்த வேண்டிய மீதத் தொகை ஏதேனும் இருப்பின் அந்த விவரத்தையும் தெரிவிப்பார்கள்.
10. வாகன உரிமையாளர் கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருப்பின் அதைச் செலுத்தி புதுப்பிக்கப்பட்ட வாகனத்தை எடுத்துச் செல்லலாம்.



No comments:

Post a Comment