சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Aug 2015

நெத்தியடி - சரஸ்வதி - மதுபான ஆலைகளை அரசே ஏற்று நடத்தினால்?

நேற்று அதிமுகவின் சி. ஆர். சரஸ்வதி அடித்த அடியில் திமுக தலைதெறிக்க ஓடிக்கொண்டு இருக்கிறது.

நாம் நினைத்தது போல விஷயம் இல்லை. 

இன்னும் மோசமாக இருக்கிறது அவர் சொல்வதைக் கேட்டால்.

தமிழ்நாட்டில் 11 மதுபான தொழிற்சாலைகள் இருக்கின்றன.

அதில் 6 தொழிற்சாலைகள் திமுகவினுடையதும், 5 தொழிற்சாலைகள் ஜெயலலிதாவினுடையது என்று நாம் இதுவரை சொல்லி வந்தோம்.

ஆனால் உண்மை நிலையை சி. ஆர் . சரஸ்வதி உடைத்துச் சொல்லி விட்டார்.

10 தொழிற்சாலைகள் திமுகவினருடையது, 1 தொழிற்சாலை 'மிடாஸ்' மட்டும் தான் ஜெயலலிதாவினுடையது என்று தெள்ளத்தெளிவாகச் சொல்லி விட்டார்.

தமிழ்நாட்டின் மதுதேவையில் 90 சதவீதத்தை திமுக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தான் பூர்த்தி செய்கின்றன என்றும், வெறும் 10 சதவீதம் அளவில் தான் 'மிடாஸ்' மது தயாரித்து தருகிறது என்றும் சொன்னார்.

திமுக சம்பந்தப்பட்ட கம்பெனிகளில் நாளொன்றுக்கு 2500 கோடி ரூபாய்க்கு மது வாங்கப்படுகிறது என்று அவர் சொல்லி இருப்பதைப் பார்த்தால், ஏற்கனவே நாம் சொன்னபடி, திமுகவினர் நாளொன்றுக்கு 500 கோடி வருமானம் பார்க்கவில்லை, அதற்கும் மேலாக சுமார் 1800 கோடி ரூபாய் அளவுக்கு தினமும் வருமானம் பார்க்கிறது.


தினமும் 1800 கோடி வருமானம் பார்க்கிறார்கள் என்றால், நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.

மாதத்துக்கு 54,000 கோடி ரூபாய். அப்படியானால் வருடத்துக்கு 6, 48,000 கோடி லாபம் பார்க்கிறார்கள். அம்மாடி.!

எந்தத் தொழில் செய்தாலும் இவ்வளவு லாபம் யாராலும் அடைய முடியாதே !

திமுகவினர். 10 தொழிற்சாலைகளுமே கருணாநிதி, முக ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் பின்னணியில் தான் இயங்குகிறது, ஆனால் பினாமிகளின் பேரில் என்று அடித்துச் சொல்கிறார் சி.ஆர். சரஸ்வதி.

அவரது இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாத , மு.க. ஸ்டாலின் காரில் ஏறி தப்பித்து ஓடுகிறார்.

துரத்திக் கொண்டு வந்து கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்களைப் பார்த்து, ' மிடாஸ் தொழிற்சாலைப் பற்றி ஜெயலலிதா சசிகலாவிடம் போய்க் கேளுங்கள், என்னையே ஏன் நோண்டிக்கிட்டு இருக்கீங்க !' என்று கோபப்படுகிறார். கார் கண்ணாடியை மேலேற்றிவிட்டு ' வண்டிய எட்றா' என்று தனது கார் ஓட்டியைப் பார்த்து கண் சிவக்கிறார். .

அரசியல் ஆதாயத்துக்காக மதுவிலக்கு போராட்டங்களைக் கையில் எடுத்து விட்டு, இன்று மானம் போய் 'மசமச'த்து நிற்கிறது திமுக. கருணாநிதி சொல்வதை எவரும் நம்பத் தயாரில்லை. 'தினமும் 1800 கோடி வருமானம் பார்ப்பவர்கள் மதுவிலக்கு கொண்டு வந்து அதை எப்படி இழக்கத் துணிவார்கள் ?' என்று மக்கள் கேட்கிறார்கள்.

மதுவை உற்பத்தி செய்து கொண்டே பது எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்துவார்களாம், மக்கள் அதை நம்பி இவர்களை கொண்டு போய் ஆட்சியில் அமர்த்தி விடுவார்களாம்.

எந்த மரமண்டையில் தோன்றியது இப்படி ஒரு ஐடியா என்று தெரியவில்லை !

நாளொன்றுக்கு 2500 கோடிக்கு மது வாங்கப்படுகிறது, திமுகவினரிடம் இருந்து என்றால் மாதத்துக்கு 75000 கோடி, அதுவே வருடத்துக்கு 9 லட்சம் கோடிக்கு மது வாங்கப்படுகிறது.

9 லட்சம் கோடிக்கு வாங்கப்படும் மதுவை விற்பதால் அரசுக்கு வெறும் 30, 000 கோடி ரூபாய் தான் லாபம் கிடைக்கிறது . திமுகவுக்கு 6, 48.,000 கோடி வருமானம் !

தி.மு.கவின் இந்த மது பான வருமானத்திற்கு முற்றி புள்ளி வைக்கத்தான் டாக்டர் ராமதாசும் மதுவிலக்கு போராட்டத்தை கையில் எடுத்துள்ளார் என்பது சின்ன பிள்ளைக்கும் புரியும்.

எதை பற்றியெல்லாமோ பற்றி பேசும் மனுசுய புத்திரன் ஏன் மதுவிலக்குப் பற்றி பேசவில்லை.விருது கைகளையும் வாயையும் கட்டி விட்டது.இதற்க்கு முன்னாள் விருது வாங்கினாரே கவிக்கோ அப்துல் ரக்மான் அவருக்குத் தெரியாதா மது கொடியது என்று.

அவர் ஏன் ஒரு அறிக்கை கூட விடவில்லை.

அப்படியானால் மதுக் கடைகளை மட்டும் அரசு நடத்துவதற்கு பதிலாக மது தொழிற்சாலைகளையும் அரசு எடுத்து நடத்தினால் என்ன என்பதைப் பற்றி அரசு யோசிக்கத் தொடங்க வேண்டும்.
இதனால் திமுக அடிக்கும் கொள்ளையும் அரசுக்கு வந்தார் போல இருக்கும்.

தரமான மதுவும் கிடைக்கும்.

தனியார் மதுபான தொழிற்சாலைகளை நடத்தக் கூடாது என்று சட்டம் செய்து இயங்கிக்கொண்டு இருக்கும் 11 தொழிற்சாலைகளையும் அரசு ஏற்று நடத்தினால், ஆண்டுக்கு 6,80,000 கோடி ரூபாய்கள் வருமானம் கிடைக்குமே !

நாளைடைவில் மதுவிலக்கு கொண்டு வருவதைப் பற்றி யோசிக்க முடியும் !

ஜெயலலிதா செய்வாரா ?




No comments:

Post a Comment