சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Aug 2015

மீண்டும் ஒரு சோதனையில் தோற்றது நெஸ்லே 'மேகி'

நூடுல்ஸ் விற்பனையில் முன்னணியில் இருந்த நெஸ்லே நிறுவனத்தின் 'மேகி' மீண்டும் ஒரு சோதனையில் தோற்றது. 

லக்னோ உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக சோதனைக் கூடத்தில் மேகி நூடுல்ஸின் ஐந்து மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இங்கு சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மேகி நூடுல்ஸ் மாதிரிகள், லக்னோ அருகிலுள்ள பாரபங்கியிலிருந்து பெறப்பட்டுள்ளன. 


மேகியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக காரீயம் இருப்பது இந்தச் சோதனையிலும் தெரிய வந்துள்ளதாக அந்தச் சோதனைக் கூட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தச் சோதனை முடிவுகள் இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
 
ஜூன் மாதம் முதல் மேகி விற்பனை நாடு முழுவதும் தடை செய்யப்பட்டது. மீண்டும் மேகி விற்பனைக்கு வருமென நெஸ்லே நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்போது இந்தச் சோதனை முடிவுகள் நெஸ்லேவுக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது. 

ஏற்கனவே பங்குச் சந்தையில் நெஸ்லேவின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகி வரும் நிலையில் மேலும் அதன் பங்குகளின் விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment