சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Aug 2015

பத்து வகையான ஃபேஸ்புக் பயனாளிகளில் நீங்கள் எந்த ரகம்?

மூக வலைப்பின்னல் தளங்களில் ஃபேஸ்புக் செல்வாக்கு மிக்கதாக இருக்கிறது என்பதை சொல்லவே வேண்டாம். இணையத்தை பயன்படுத்துபவர்களில் 50 சதவீதம் பேருக்கு மேல் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இணையவாசிகளில் பெரும்பாலானோர் ஃபேஸ்புக் பயனாளிகளாக இருப்பதுடன் அவர்களில் பலர் ஃபேஸ்புக்கே கதி என்றும் இருப்பது உண்டு. சிலர் ஃபேஸ்புக்கை சுய புலம்பல்களுக்காக பயன்படுத்துகின்றனர். சிலர் நண்பர்களின் எண்ணிக்கை பற்றி பெருமை பட்டுக்கொள்ள பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் எதை எடுத்தாலும் ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலாக்கி விடுகின்றனர்.

இப்படி பலவிதமாக ஃபேஸ்புக் பயன்படுத்தப்பட்டாலும், ஃபேஸ்புக் பயனாளிகள் மத்தியில் காணப்படும் பொதுவான சில அம்சங்களின் அடிப்படையில் அவர்களை பிரித்து விடலாம் என்கின்றனர். அந்த வகையில் ஃபேஸ்புக்கில் பார்க்க கூடிய பத்து வகையான பயனாளிகளை தொழில்நுட்ப இணையதளமான மேக்யூஸ்ஆப் விவரித்துள்ளது.


சுய விரும்பிகள்

எப்போதும் தங்களைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் சுய விரும்பிகளுக்கு ஃபேஸ்புக்கை விட சிறந்த இடம் வேறில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை பற்றி நுணுக்கமாக பகிர்ந்து கொள்ளலாம். செல்பிக்களை வெளியிடலாம். உலகம் தங்களைச்சுற்றியே இருக்கிறது என நினைத்து மகிழலாம். இவர்கள் மதிய உணவு முதல் மாலை நேர காபி வரை எல்லாவற்றையும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டு, அதை மற்றவர்கள் லைக் செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். ஃபேஸ்புக் கால நார்சிஸ்ட்கள் என்று இவர்களை சொல்லலாம். ஐயோ பாவம் என்றும் நினைத்துக்கொள்ளலாம்.

நச்சரிக்கும் மனைவி

இது உங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கலாம். ஆனால், உண்மை என்ன என்றால் சில மனைவிமார்கள் ஃபேஸ்புக்கிலும் கணவன்களை விரட்டிக்கொண்டிருக்கின்றனர் என்பது தான். மின்சார பில் கட்ட வேண்டும், மாலை காய்கறி வாங்கி வர வேண்டும், பள்ளியில் இருந்து பிள்ளைகளை அழைத்து வர வேண்டும் போன்ற கட்டளைகளை எல்லாம் கணவகளுக்கு ஃபேஸ்புக் மூலமே பிறப்பிக்கும் மனைவிகள் இருக்கின்றனர்.

கண்காணிப்பு அம்மாக்கள்

ஃபேஸ்புக் இளைஞர்களின் கூடாரம் என நினைத்துக்கொண்டிருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். அம்மாக்கள் அங்கு முற்றுகையிட்டு இருக்கின்றனர். ஃபேஸ்புக் என்றால் என்ன என்று முழித்த நிலை மாறி இன்றைய புத்திசாலி அம்மாக்கள், பிள்ளைகள் மீது ஒரு கண் வைத்துக்கொள்ள இதை விட்டால் சிறந்த இடம் வேறில்லை என புரிந்து கொண்டுள்ளனர். எனவே, ஃபேஸ்புக் அம்மாக்கள் பிள்ளைகளின் நிலைத்தகவலை உடனே படித்து தவறாமல் லைக் செய்கின்றனர். இதன் மூலம், மகனே/மகளே, நான் கவனித்துக்கொண்டே இருக்கிறேன் என உணர்த்துகின்றனர்.

செயற்பாட்டாளர்

இவர்கள், சூடான செய்தியை பார்த்து பொங்கியதுமே, அந்த குமுறலை ஃபேஸ்புக்கில் வந்து கொட்டுபவர்கள். முக்கிய செய்திகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டு அது பற்றிய கருத்துக்களையும் பகிர்வது தான் இவர்களின் முக்கிய வேலை. இப்படி பகிரப்படும் செய்திகளை படிக்கும் போது இன்னும் உற்சாகமாக கருத்தும் சொல்வார்கள். ஃபேஸ்புக் விவாதம் மூலம் உலகையே மாற்றிவிடலாம் என்றும் கூட நினைத்துக்கொண்டிருப்பவர்கள்.

சதியாளர்கள்

அடிப்படையில் சந்தேகப்பிராணிகளான இவர்களுக்கு ஃபேஸ்புக் சரியான களம். எந்த தகவலாக இருந்தாலும் அதன் பின் ஒரு சதி வலையை உருவாக்கி, அது பற்றிய விவாத்ததை உண்டாக்குவது இவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. இதை ரசித்து செய்வதோடு முழுமையாக நம்புவதும் உண்டு.
நம்பிக்கையாளர்கள்

பொன்மொழிகள், மேற்கோள்கள் என தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் நம்பிக்கையை விதைத்துக்கொண்டிருப்பவர்கள். உலகம் இனிமையான இடம் என்ற உணர்வை தரும் வகையில் பாசிட்டிவான செய்திகளை பகிர்வதற்கு முக்கியத்துவம் தருபவர்கள். உலகம் அன்பால் இயங்குகிறது என்பது தான் இவர்களின் நம்பிக்கை. சில நேரங்களில் எரிச்சல் தரலாம். ஆனால், சோர்வான நேரங்களில் இவர்களின் பக்கத்தில் எட்டிப்பார்த்தால் உற்சாகம் தானாக வரும்.

கவன ஈர்ப்பாளர்கள்

சுய விரும்பிகளின் இன்னொரு வகையாக இருப்பவர்கள். இவர்களுக்கு தங்களைப்பற்றி பேசினால் மட்டும் போதாது. உலகம் தங்களை கவனிக்க வேண்டும் என விரும்பி அதற்காக திடுக்கிடும் வகையில் எதையாவது பகிர்ந்து கொண்டே இருப்பார்கள். அவை அபத்தமாக கூட இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதே முக்கியம்.
ஜோக் ரசிகர்கள்

உலகம் சிரித்து மகிழ வேண்டும் என நினைப்பவர்கள். ஒரு நல்ல ஜோக் அல்லது நகைச்சுவை வீடியோ கிடைத்தால் உடனே தன்னைப்போலவே மற்றவர்களும் ரசித்து சிரிக்கட்டும் என அதை பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், சில நேரங்களில் கடி ஜோக்கையும் அனுப்பி கடுப்பேற்றுவார்கள்.

விவாகரத்து களம்

ஃபேஸ்புக்கில் பல விவாதங்கள் நடைபெறுவதுண்டு தான். ஆனால், சில நேரங்களில் விவாகரத்து பெற்ற மாஜி கணவன், மனைவிகள் தங்கள் கருத்து மோதல்களை ஃபேஸ்புக்கிலும் தொடர்வது உண்டு. நீதிமன்றம் மூலம் பிரிந்து விட்டாலும் கூட ஃபேஸ்புக்கில் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பார்கள். நம்மூரில் இந்த ரகத்தினர் உண்டா? எனத்தெரியவில்லை.
சுற்றுலா பயணிகள்

அப்புறம் இருக்கவே இருக்கின்றனர் சுற்றுலா பயணிகள். தாங்கள் பார்த்து ரசித்த இடங்களை புகைப்படமாக பகிர்ந்து கொளவதில் மகழ்ச்சி அடைபவர்கள் இவர்கள். சமயங்களில் உலகின் சொர்க்கங்களை பார்க்கலாம். ஆனால், சில நேரங்களில் பார்த்து சலித்த சாதாரண இடங்களை கூட சுற்றுலா சொர்க்கமாக சொல்லிக்கொள்வார்கள்.

எல்லாம் சரி, இவர்களில் நீங்கள் எந்த ரகம் என கேட்டுக்கொள்ளுங்கள்.



No comments:

Post a Comment