தமிழகத்தில் 18.8% தாய்மார்கள் மட்டுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் ‘யுனிசெப்’ நிறுவனம் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் குறித்து ‘யுனிசெப்’ நிறுவனம் ஆய்வு செய்து சில தகவல்களை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில், "இந்திய அளவில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டும் பெண்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மிகவும் குறைந்துள்ளது. பெண் கல்வி சதவிகிதம் மிகவும் குறைவாக உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் 50 சதவீதம் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் 5 வயதுக்குள் நடக்கும் 13 சதவீதம் இறப்புகளை குறைக்க முடியும்.
அவ்வாறு பார்த்தால் தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு 3,600 குழந்தைகளின் இறப்பை தவிர்க்க முடியும்.
தமிழ்நாட்டில் சராசரியாக 18.8 சதவீதம் பேர் மட்டுமே தாய்ப்பால் வழங்குகின்றனர். குறிப்பாக சென்னையில் 7 சதவீதமும், திருவாரூர், தேனி மாவட்டங்களில் 10 சதவீதம், ஈரோடு 12 சதவீதம், தஞ்சாவூர் 13 சதவீதம், கன்னியாகுமரி 35 சதவீதமாக உள்ளது. 2007-08ம் ஆண்டு ஆய்வின்படி 22.4 சதவீதமாக இருந்த தாய்ப்பால் ஊட்டும் வழக்கம். 2012-2013ம் ஆண்டு 18.8 சதவீதமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து ‘யுனிசெப்’ நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில தலைவர் ஜோப் சக்கரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் தாய்ப்பால் ஊட்டுவதின் நன்மைகள், அவசியம் குறித்து அதிகளவில் விழிப்புணர்வு அளிக்க வேண்டும். குறிப்பாக கிராம மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பணியிடங்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். சர்வதேச தொழிலாளர் நிறுவன உடன்படிக்கைபடி கர்ப்பமுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 14 வார சம்பளத்துடன் கூடிய விடுமுறையும், பணி நேரத்தில் தாய்ப்பாலூட்ட இடைவேளையும், குறைக்கப்பட்ட பணிநேரமும் வழங்க வேண்டும். பணியிடங்கள் அனைத்திலும் குழந்தைகளுக்கான காப்பகங்களை அமைப்பதுடன், பாலூட்டும் தாய்மார்களுக்கு தங்களது தாய்பாலை பிரித்தெடுக்கவும், சேமித்து வைக்கவும் தனி இடங்களை உருவாக்கித் தரவேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
தாய்ப்பால் மிக மிக அவசியம் என்பதை இனியாவது உணர்வோமா?!

No comments:
Post a Comment