சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Apr 2015

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... தமிழ்நாட்டிலே!

மிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகின்றன. முதல் பேச்சுவார்த்தை கடந்த 1977ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்பார்கள். 
 
இதன்பிறகு 1980, 83, 86, 89, 92, 95, 98 ஆகிய ஆண்டுகளில் ஊதிய ஒப்பந்தம் நடத்தப்பட்டன. 98ம் ஆண்டுக்குப்பிறகு 2001ம் ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். ஆனால், அப்போதைய அ.தி.மு.க அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் தொழிலாளர்கள் ஸ்டிரைகள் நடந்து தமிழகம் முழுவதும் பல்வேறு களேபரங்கள் அரங்கேறின. இதையடுத்து 2005ம் ஆண்டு மீண்டும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இருந்த ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 5 ஆண்டுகள் என்று மாற்றியமைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2003ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டு வரை செல்லும் என்று 2005ல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று 2007ல் அடுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2010ஆம் ஆண்டு வரைச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. 


2010ல் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்த போது 6வது ஊதியக்குழு பரிந்துரையின்படி தர ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்தம் முடிவானது. இது தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தொழிலாளர்கள் எதிர்பார்த்தளவுக்கு ஊதிய உயர்வு இல்லை. 2010ஆம் ஆண்டுக்குப்பிறகு  2013ல் ஊதிய ஒப்பந்தம் நடத்தப்பட வேண்டும். ஆனால் பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்களை அரசு அழைக்கவில்லை. இதனால் தொழிற்சங்கங்கள் மீண்டும் ஸ்டிரைக் என்ற ஆயுதத்தை கையில் எடுத்ததால் வேறுவழியின்றி இப்போது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசு நடத்தி வருகிறது. கடைசியாக போக்குவரத்து கழகத்தில் 22.1.2011ல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதுவரை 11 தடவை ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

12வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் காரசாரமாக இப்போது நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நான்கு கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. போக்குவரத்து கழகங்கள் சார்பில் 14 அதிகாரிகளுடன் 42 தொழிற்சங்கங்கள் பங்கேற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்று வருகின்றனர். மீண்டும் வரும் 10ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. ஒவ்வொரு கட்ட பேச்சுவார்த்தையும் சுமூகமாக நடந்து வருவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தப்போதே நடத்தப்பட்டுள்ளது. 2010ல் நடந்த பேச்சுவார்த்தையின் போது தேர்தலில் நடத்தி அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கமான தி.மு.கவின் எல்.பி.எப் மட்டும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் சம்மேளனம் (ஏ.ஐ.டி.யு.சி) மாநில துணை தலைவர் ஆறுமுகம் கூறுகையில், "அரசு போக்குவரத்து கழகங்களைப் போல மின்வாரியத்துக்கும் ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. 2010ல் நடந்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் மின்வாரிய ஊழியர்களுக்கும், அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் இடையே ஊதிய வேறுபாடு ஏற்படுத்தியது. இந்த இரண்டு அரசு நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கினாலும் ஒருதலைபட்சமாக  மின்வாரியத்துக்கு மட்டும் ஊதிய உயர்வு அதிகம் என்பது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திடம் வைக்கும் பிரதான கோரிக்கையாக இருப்பது மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதைப் போல போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று ஒவ்வொரு பேச்சுவார்த்தையின் போதும் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதை அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இதையடுத்து போக்குவரத்து கழக தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தோம். இதற்கு அரசு போக்குவரத்து கழகங்கள் கம்பெனி சட்டத்தின் கீழ் இயங்குவதால் இது இப்போதைக்கு சாத்தியமல்ல என்று கைவிரித்து விட்டனர்.

இப்போது நடந்து வரும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தொழிற்சங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் முக்கியமானது ஓய்வூதிய திட்டத்துக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். 50 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். மின்வாரியத்தை போல எங்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்களும் வலியுறுத்தி உள்ளோம். ஆனால் இந்த கோரிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்" என்றார்.
பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொது செயலாளர் லட்சுமணன் கூறுகையில், "கடந்த முறை ஊதிய ஒப்பந்தத்தில் அங்கீகாரம் பெற்ற சங்கமான எல்.பி.எப். (தி.மு.க) மட்டும் பங்கேற்றது. இந்த முறை அனைத்து தொழிற்சங்கங்களும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க எல்.பி.எப் சம்மதம் தெரிவித்து கடிதம் கொடுத்தது. இதனால் 42 தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்று வருகின்றன. கடந்த 1992ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை போடப்பட்ட ஒப்பந்தத்தில் அமலாகாத சரத்களை (விஷயங்களை) அமல்படுத்த வேண்டும் என்று பேசினோம். தினக்கூலி தொழிலாளர்களுக்கும், பணி நிரந்தரம் தொழிலாளர்களுக்கும் ஊதியத்தில் எந்தவித முரண்பாடுகளை களைய வேண்டும். மத்திய அரசின் பென்சன் திட்டத்திலிருந்து விதிவிலக்குப் பெற்று அதை விட சிறப்பான பென்சன் திட்டம் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்வோம் என்று மத்திய அரசே ஒத்துக்கொண்டுள்ளது. தொழிற்சங்கமும், நிர்வாகமும் சேர்ந்து பென்சன் அறக்கட்டளை என்ற பெயரில் தொடங்க வலியுறுத்தியுள்ளோம். இதுதொடர்பாக அடுத்த பேச்சுவார்த்தையின் போது நல்ல முடிவோடு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு கட்ட பேச்சுவார்த்தையும் சுமூகமாக நடந்து வருகிறது. 50 சதவிகித ஊதிய உயர்வை கேட்டு இருக்கிறோம்" என்றார்.


இந்த முறையாவது மின்வாரியம் போல எங்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு ஒவ்வொரு போக்குவரத்து கழக தொழிலாளர்களிடம் உள்ளது.


No comments:

Post a Comment