சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Apr 2015

'தமிழகம் விரைவில் கடனால் மூழ்கிவிடும்!'

மிழக அரசின் சமீபத்திய பட்ஜெட், மாநிலத்தின் மோசமான நிதி நிலைமைகளை அறிவுறுத்தியுள்ள நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் இலவசத் திட்டங்களுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படுவது குறித்து கேள்விகள் எழுகின்றன.

இலவசத் திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்ட தொகையில் 25,000 பள்ளிகளையோ அல்லது 11,000 முதல்நிலை சுகாதார மையங்களையோ ஏற்படுத்தியிருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் அடுத்தடுத்த தமிழக அரசுகளால் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது, ரூ.11,561 கோடி இலவசத் திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக 3 இலவசத் திட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள், மடிக்கணினிகள் மற்றும் மிக்ஸி, ஃபேன் உள்ளிட்ட இலவச வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகிய இலவசத் திட்டங்களுக்கு பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி ஆய்வு மையத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் இதுபற்றி கூறும்போது, “இலவசத் திட்டங்களுக்குச் செலவிட தமிழக அரசிடம் மீதம் எதுவும் இல்லை. மாநில பொருளாதார வளர்ச்சி விகிதத்துக்கும், பொதுக்கடன் வளர்ச்சி விகிதத்துக்கும் உள்ள வித்தியாசம் குறுகிக் குறுகி  தற்போது பூஜ்ஜியத்தில் வந்து நின்றுள்ளது. ஏதோ ஒரு கட்டத்தில் இலவசங்கள் நிறுத்தப்படுவது அவசியம்” என சொல்வது பெரிய அதிர்ச்சியை எற்படுத்துகிறது.

பல வளர்ச்சி திட்டங்கள் இலவசங்களால் தடைபடுவது மாநிலத்தை பலவீனப்படுத்திவிடும்; மேலும் மேலும் கடன் வாங்கி இலவசங்களுக்கு செலவிடுவது பேராபத்தை  விளைவிக்கும்; இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறிகள் ஆக்கும் போக்கு  நிறுத்தப்படவேண்டும்; இனிவரும் சட்டமன்ற தேர்தலிலாவது இலவசம் தருவதாக வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளி  வீசக்கூடாது; இல்லாவிடில் இப்போது கடனில் தத்தளிக்கும் தமிழகம் விரைவில் கடனால் மூழ்கிவிடும்!

No comments:

Post a Comment