சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Apr 2015

சுரேஷ் ரெய்னாவின் திருமணமும் ஒரு கிராமத்தின் வருத்தமும்!

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் திருமணத்திற்கு மணமகளின் சொந்த கிராமத்து மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படாததால் அந்த கிராமத்து மக்கள் வருத்தமடைந்துள்ளனர்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சுரேஷ் ரெய்னா-பிரியங்கா சவுத்ரி ஆகியோரின் திருமணம் இன்று டெல்லியில் உள்ளலீலா பேலஸ் பேலஸ் ஹோட்டலில் நடைபெறுகிறது. உலகக் கோப்பை போட்டி நடந்து கொண்டிருந்தபோதுதான் ரெய்னாவின் திருமண செய்தி வெளியானது. மணமகள் மீரட் நகருக்கு அருகில் உள்ள பாம்னோலி என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர். சுரேஷ் ரெய்னாவை தங்கள் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் மணக்கப் போவதால், மணமகள் பிரியங்காவின் சொந்த கிராமத்து மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். 


புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஒருவர் தங்கள் கிராமத்து மருமகனாக வருவதால் அந்த மக்கள் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தை அந்த சிறிய கிராமத்தில் பெரிய திரை கட்டி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவெல்லாம் பாம்னோலி கிராமத்தின் மருமகனாக சுரேஷ் ரெய்னா வரப்போவதால் ஏற்பட்ட விளைவுதான். 

ஆனால் சுரேஷ் ரெய்னா- பிரியங்கா ஆகியோரின் திருமணத்திற்கு பாம்னோலி கிராமத்தை சேர்ந்த நான்கே நான்கு பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் அழைப்பிதழ் இல்லாதவர்கள் வருத்தமடைந்துள்ளனர்.  இதுகுறித்து பாம்னோலி கிராமத்தை சேர்ந்த சஞ்சீவ் தோமர் என்பவர் கூறுகையில், "நாங்கள் அனைவருமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தோம். ஆனால் பிரியங்காவின் தந்தை தேஜ்பால் எங்களை அழைக்கவில்லை" என்றார் சோகம் பொங்க.

டெல்லியில் திருமணம் நடைபெறும் ஏழு நட்சத்திர ஹோட்டலான லீலா பேலஸில், பாதுகாப்பு கருதி கிராம மக்களை அழைக்க முடியாமல் போனதாக பிரியங்காவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் தோனி, மனைவி சாக் ஷி, குழந்தை ஷீவாவுடன் திருமணத்தில் பங்கேற்கிறார்.. துணை கேப்டன் விராட் கோலி தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் திருமணத்தில் கலந்து கொள்கிறார். இதுதவிர இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களுமே சுரேஷ் ரெய்னாவின் திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர். .


No comments:

Post a Comment