சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Oct 2015

'தமிழ் சினிமா ரசிகர்களே... ஒரு நிமிடம் உங்கள் பெற்றோரை நினைத்துக் கொள்ளுங்கள்!'

ண்மையில் நடிகர் விஜய் நடித்த 'புலி' திரைப்படம் வெளியானது.  நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்களான சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த  சவுந்திரராஜன் மற்றும் உதயகுமார் இருவரும் ‘புலி’ பட வாழ்த்து போஸ்டர் ஒட்ட மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அப்போது ஏற்பட்ட  விபத்தில் சிக்கி இருவரும் பலியாகினர். இந்தச் செய்தி நடிகர் விஜய்க்குத் தெரிவிக்கப்பட்டதும் மிகவும் கவலையடைந்ததோடு, இன்று காலை சவுந்திர ராஜன் மற்றும் உதயகுமார் ஆகியோரின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மகன்களைப் பறிகொடுத்த பெற்றோர் வசித்த வீட்டை புகைப்படத்தில் கண்டபோதே,  அவர்களின் ஏழ்மை நிலை நன்றாகவே தெரிந்தது. 

விபத்து என்பது எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். போஸ்டர் ஒட்ட சென்றதால்தான் விபத்து ஏற்பட்டது என்று இங்கே கூற வரவில்லை. ஆனால், தமிழகத்தில் ஒரு சவுந்திரராஜனும் உதயகுமாரும் மட்டும் இல்லையே... லட்சக்கணக்கான சவுந்தரராஜன்களும் உதயகுமார்களும் அல்லவா தமிழகம் முழுவதும் நிரம்பி கிடக்கின்றனர்.

பொதுவாகவே 1970-களுக்குப் பிறகு, விளையாட்டுப் போட்டிகளில் தமிழக இளைஞர்கள் செலுத்திய கவனத்தை சினிமா மீது செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடி போன்ற வீர விளையாட்டுகள் சீண்ட ஆளில்லாமல் இருக்கிறது. தமிழ் சினிமா,  'மாலை நேர விளையாட்டு ' என்ற இடத்தில் இருந்து சினிமா என்ற மாயை  உலகுக்கு இளைஞர்களை அழைத்து சென்று விட்டது. 

எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி- கமல் இப்போது தல-  தளபதி என்று மோதல்கள் ஏற்படுகின்றன. ஒரு படம் வெளியானால் அந்த நடிகரின் கட்- அவுட்டுக்கு பாலாபிஷேகம் நடத்துவதையும், ரசிகர்கள் என்ற போர்வையில் அவர்களின் செயல்பாடுகளையும் காண சகிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இரவே போய் தியேட்டர் வாசல்களில் காத்துக் கிடந்து,  முதல் நாள் முதல்  ஷோவைப் பார்த்துவிட வேண்டுமென்று துடிக்கும் ரசிகர்களை என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

ஒரு சினிமா வெளியானால் போய் பார்க்கலாம். பிடித்திருந்தால் இன்னொரு முறை பார்க்கலாம். அதற்காக ரசிகர் மன்றம் என்ற போர்வையில் பெற்றோரை மறந்து, உழைப்பையும் மறந்து, உயிரையும் துறப்பதை என்னவென்று சொல்வது? ஒரு சவுந்திரராஜனுக்காக, உதயகுமாருக்காக விஜய் வீடு தேடி போய் ஆறுதல் சொல்லலாம்... இதேபோல் ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர் போய்க்கொண்டிருக்க முடியுமா? அல்லது அதுதான் சாத்தியமா? 

படத்தில் நடிப்பது விஜய்யின் தொழில். அந்தப் படம் நன்றாக இருந்தால் ஒரு முறைக்கு இரு முறை பார்ப்பது ரசிகர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. அத்துடன் முடித்துக்கொண்டு, உழைப்பில் கவனம் செலுத்தினால் தமிழகம் உன்னத நிலையை அடைய முடியுமே.
தமிழகத்துக்கு தமிழ் சினிமாவும் ஒரு டாஸ்மாக்தான் என்பதை தமிழக இளைஞர்களே... தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். விழித்துக்கொள்ளுங்கள்... ஒரு நிமிடம் உங்கள் குடும்பத்தினரை நினைத்துக் கொள்ளுங்கள்!


No comments:

Post a Comment