டெல்லி சட்டபேரவை உறுப்பினர்களின் சம்பளம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு தன்னுடைய அறிக்கையை சமர்பித்துள்ளது. அந்த குழு பரிந்துரைகளை முதல்வர் கெஜ்ரிவால் ஏற்கும்பட்சத்தில் டெல்லி எம்.எல்.ஏ.க்கள் இந்தியாவின் பணக்காரர்களாக மாற வாய்ப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
பொது மக்களின் பிரச்னைகளை முன்னெடுத்து, வீதிகளில் இறங்கி போராடி டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி கட்சி. டெல்லியின் 70 சட்டபேரவை உறுப்பினர்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு 67 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள், தங்களின் ஊதியத்தை உயர்த்தும்படி கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் டெல்லி சட்டபேரவை உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்துவது தொடர்பாக ஆராய ஒரு குழுவை சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல் அமைத்தார். அந்த குழு, தன்னுடைய அறிக்கையை தற்போது சமர்பித்துள்ளது. அதில், எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை 4 மடங்கு (400%) உயர்த்தி பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
அந்த குழுவின் பரிந்துரைகளை கெஜ்ரிவால் அரசு ஏற்கும்பட்சத்தில், டெல்லி எம்.எல்.ஏ.களின் சம்பளம் 12 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக அதிகரிக்கும். மேலும், சட்டபேரவை நடைபெறும்போது கொடுக்கப்படும் அலவன்ஸ் தொகை 2 ஆயிரமாக அதிகரிக்கும். அவர்களின் தொகுதி அலவன்ஸ் ரூ.50,000 மற்றும் அலுவலக அலவன்ஸ் ரூ.95,000 ஆக அதிகரிக்கும்படி அந்த குழு தனது அறிக்கையில் முன்மொழிந்துள்ளது.
நாட்டிலேயே அசாம் எம்.எல்.ஏ.கள் அதிகபட்சமாக ரூ.60 ஆயிரமும், குறைந்தபட்சமாக கேரள எம்.எல்.ஏ.கள் ஆயிரம் ரூபாயும் சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment