சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Oct 2015

ஆண்ட்ராய்ட் மார்ஷ்மெல்லோ- ரவுண்ட் அப்!

அரசன், ஆண்டி, அம்மிக்கல், ஆத்திச்சூடி இது போன்ற வார்த்தைகளை கடந்து வந்த நாம் தான் 'ஆண்ட்ராய்ட்' என்ற வார்த்தையையும் கடந்து கொண்டு இருக்கிறோம்.

ஆண்ட்ராய்ட் - இது ஒரு வகையான மென்பொருள். கணினிகளிலும், ஸ்மார்ட் போன்களிலும் உள்ள மென்பொருள்களை இயக்குவதற்காக உருவாக்கப்பட்ட தளம் (operating system). இந்த தளத்தை பிரத்யோகமாக ஸ்மார்ட் போன்களிலும், டேப்லெட்டுகளிலும் இயக்கப் பயன்படுத்துவர். இதை 2003ல் ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ் நிறுவனம் (open handset alliance) தொடங்கியது. பின்பு அதை 2005 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் வாங்கிக் கொண்டது.

இந்த ஆண்ட்ராய்டில் பல பகுதிகள் (version) வந்துள்ளன. இதன் பிரத்யோக அடையாளமான (logo) அந்த பச்சை நிற பொம்மையினை வடிவமைத்தவர் ஐரினா ப்லாக். இதன் நிர்வாக மேலதிகாரி ரியான் ஜிப்சன். அவர் தான் ஆண்ட்ராய்டுக்கே உரித்தான அந்த குறிப்பு புனைப் பெயரை (code name) சூட்டியவர். அதன் சிறப்பு என்னவென்றால் அதன் பெயராக இனிப்பு சுவையுடைய தின்பண்டங்களின் பெயரையிடுவது, மேலும் அது ஆங்கில எழுத்தின் சீர்வரிசையில் (alphabetical) அமைந்திருக்கும், இதன் மூன்றாவது  பகுதி (1.5) கப்கேக் (cup cake) தான் உலகம் முழுவதும் பயன்படுத்தும் வகையில் 2009 ஏப்ரல் 27ஆம் தேதி வெளியானது.
இந்த கப்கேக் பகுதி, கணினியில் பயன்படுத்தும் 'லினக்ஸ் கர்னல்' மென்பொருளை தழுவி உருவாக்கப்பட்டிருந்தது. 2007 ஆம் ஆண்டு நவம்பர் 5, இதன் முதல் பகுதி வெளியானதால் 'ஆண்ட்ராய்ட் பிறந்த நாளாக  நவம்பர் 5 ஐ கொண்டாடுகிறார்கள். இதன் முதல் இரண்டு பகுதிகளான ஆண்ட்ராய்ட் 1.0, 1.1 இரண்டுமே அந்த சிறப்பு பெயருடன் வராமல் 'ஆஸ்ட்ரோ பாய்' (astro boy), பெண்டர் (bender) என்ற பெயரில் வெளியானது. பின் அடுத்து வந்த அனைத்து பகுதிகளும், சிறப்பு இனிப்பு சுவை தின்பண்டத்தின் பெயரில் வெளியானது, அவை,

ஏப்ரல் 27,2009- ஆண்ட்ராய்ட் 1.5 கப்கேக் (cup cake)

செப்டம்பர் 15, 2009- ஆண்ட்ராய்ட் 1.6 டொனட் (donut)

அக்டோபர் 26, 2009- ஆண்ட்ராய்ட் 2.0-2.1 இக்லர் (eclair)

மே 20, 2010- ஆண்ட்ராய்ட் 2.2-2.2.3 ப்ரோயோ(froyo)

டிசம்பர் 6, 2010- ஆண்ட்ராய்ட் 2.3-2.3.2 ஜிஞ்சர் ப்ரெட்(ginger bread)

பிப்ரவரி 22, 2011- ஆண்ட்ராய்ட் 3.0 -3.2.6 ஹனிக்கோம்ப் (honey comb)

அக்டோபர் 19, 2011- ஆண்ட்ராய்ட் 4.0-4.0.2 ஐஸ் க்ரீம் சான்வெஜ் (ice cream sandwich)

ஜூலை 13, 2012- ஆண்ட்ராய்ட் 4.1-4.1.2 ஜெல்லி பீன் (jelly bean)

செப்டம்பர் 3, 2013- ஆண்ட்ராய்ட் 4.4-4.4.4 கிட் கேட்(kit kat)

ஜூன் 25, 2014- ஆண்ட்ராய்ட் 5.0-5.0.2 லாலிப்பாப் (lolli pop)

இதுவரை வந்த ஆண்ட்ராய்ட் பகுதிகளில் கிட்கேட் பகுதி தான் அதிக ஆண்ட்ராய்ட்  பயன்படுத்துவோரின் பகுதி. அதாவது, 39.2% கிட்கேட்டை பயன்படுத்துகின்றனர். அதற்கு அடுத்த படியாக, 31.8% பயன்படுத்தி 'ஜெல்லி பீன்' இரண்டாம் இடத்தில் உள்ளது. உலக அளவில் பார்க்கும் போது 59.1% இந்த ஆண்ட்ராய்ட் பயனாளிகளாக இருக்கின்றனர். சைனாவில் 68.3% ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்கள், அமெரிக்காவில் 40.78%, இந்தியாவில் 44.75% ஆண்ட்ராய்ட் பயன்படுத்துகிறோம். தற்போதைய லாலிப்பாப் பகுதி ஆண்ட்ராய்டை உலக அளவில் 12.4% பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் கூகுள் (நெக்ஸஸ்) மற்றும் ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ் இணைந்து அடுத்து வெளிவர இருக்கும் ஆண்ட்ராய்டின் புதிய பகுதி மார்ஷ்மெல்லோ. இதுவரையில் உள்ள பயன்பாட்டை புதுமை படுத்தி இந்த மார்ஷ்மெல்லோ பகுதி 6.0 இல் தொகுத்துள்ளனர்.முதலில் மார்ஷ்மெல்லோ என்றால் என்ன என்று பார்ப்போம்.

நீங்கள் நினைப்பது போல் இதுவும் ஒரு இனிப்பான தின்பண்டம் தான். இது வெள்ளை நிறத்தில் மிருதுவாக இருக்கும். முட்டை , சர்க்கரை மற்றும் சோளத்தால் செய்யப்படும் உணவுப் பொருள். இது 12ஆம் நூற்றாண்டிற்கு முன்னிருந்தே ஐரோப்பிய கண்டத்தின் உணவு பழக்கவழக்கத்தில் இருக்கிறது, மேலும் ஆண்ட்ராய்டின் சிறப்பு பெயர் வரிசையில் ஆங்கில எழுத்தின் சீர் முறைகளிலும் லாலிப்பாப்பின் 'L'க்கு அடுத்த படியாக 'M'ல் தொடங்கும் பெயர்.

அடுத்தபடியாக இதன் சிறப்பு அம்சங்கள் என பார்த்தால் ஆண்ட்ராய்ட் ரேகை பதிவு முறை (finger prints) இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இணையதளம் பயன்படுத்தும் முறையை மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் புதிதாக ஸ்மார்ட் போன்களில் இன்றைய முக்கிய பிரச்னையான, பேட்ரி சேமிப்பை அதிகப்படுத்தும் விதமாக, பின்னால் இயங்கும் மென்பொருள் சேவையை தானாக குறைத்து இயங்கும் விதத்தில் தொழில் நுட்பம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு ஆண்ட்ராய்ட் நிறுவனமிட்ட திட்டம் 'டோஷ்' (project doze). மேலும் புதிதாக இதில் விஷுவல் வாய்ஸ் ரெக்கார்டர் (visual voice recorder), லின்க் களைக் கொண்டு எளிமையாக செய்யப்படும் வலைதளம் சேவை என பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வரும் அக்டோபர் 5 திங்கள் அன்று உலக அறிவியல் சந்தையில் வெளியாக உள்ளது. அப்டேட்டுக்குத் தயாராகுங்கள் நண்பர்களே.

No comments:

Post a Comment