சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Oct 2015

'' இந்திய அணிக்கு தோனி பாரமாக இருக்கிறார் ! ''அஜித் அகர்கர் 'தைரிய 'கருத்து

ந்திய அணிக்கு தோனி பாரமாக இருப்பதாகவும் அவரது இடத்திற்கு வேறு ஒருவரை பரீசிலிக்க வேண்டுமென்றும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் கருத்து கூறியுள்ளார்.
தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து இரு டி20 போட்டிகளில் தோல்வி கண்டது. ஒரு ஆட்டம் மழையால் கை விடப்பட்டது.இந்த தோல்வியால் தோனி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் தைரியமாக கருத்து கூறியுள்ளார். 
 
'' தோனி  இந்திய அணியின் மிகப்பெரிய வீரர் என்பதை மறுக்க முடியாது. கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டார் என்பதற்காக தற்போதைய தோல்விகளை ஏற்க முடியாது. தற்போது இந்திய  அணிக்கு அவர் ஒரு சுமையாக இருக்கிறார். இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் ஒரு கேப்டனாக தோனி செயல்படுவதையும் வீரராக அவர் செயல்படுவதையும் ஆராய வேண்டும். 

ஒரு உலகக் கோப்பை முடிந்து விட்டு , அடுத்த உலகக் கோப்பைக்கு அணியை தயார் செய்கிறோம். இந்த சமயத்தில் தோனி  4வது இடத்தில் களமிறங்குவது தவறு. தோனி அதிரடியாக விளையாடிய போது, முன்னதாக களமிறங்கினால் பலன் அளித்திருக்கும். ஆனால் தற்போது பந்தை அடித்தாடும் திறமையை தோனி இழந்து விட்டார். 

தோனி தனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்க தொடர் முடிந்தவுடன் தோனி தனது எதிர்காலம்  தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்'' என்றார்

No comments:

Post a Comment