சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Oct 2015

சமரச முயற்சி என்ற பெயரில் நடிகர் சங்கத்தை சரத்குமாருக்கு தாரை வார்க்க முயற்சி! விஷால் காட்டம்


டிகர் சங்கத்தை சரத்குமார் அணிக்கு  தாரை வார்க்க வேண்டும் என்பதுதான் சமாதான முயற்சியின் பின்னணி என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
அக்டோபர் 18ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை  சரத்குமார் தரப்பும் விஷால் தரப்பும் தேர்தலில் மோதுகிறது. இந்த இரு  அணிகளுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்த தயாரிப்பாளர் சங்கம் முயற்சி மேற்கொண்டது. ஆனால், இந்த சமரச முயற்சியை ஏற்றுக்கொள்ள விஷால் தரப்பு முன்வரவில்லை. 

இதற்கிடைய  தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, சரத்குமார் தலைமையிலான நடிகர் சங்கம் பல்வேறு படங்களின் வெளியீட்டின் ஏற்பட்ட  பிரச்னைகளை தீர்த்து வைத்து சிறப்பாகப் பங்காற்றியுள்ளதால், சரத்குமார் அணியை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாகக்  கூறினார்.  

தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவு குறித்து விஷால் கூறுகையில், " சமரச முயற்சி என்பது காலம் கடந்த முடிவு. தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் சமரச முயற்சியை ஏற்கவில்லை. இது தொடர்பாக கடிதம் அனுப்பிவிட்டோம்.

நடிகர் சங்கத் தலைவராக இருந்த சரத்குமார் நிறைய நல்லது செய்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு அளிப்பதாகக் கூறுகிறார்கள். அப்படியென்றல் அந்த சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்க வேண்டியதுதானே? சமரச முயற்சி மூலமாக சரத்குமார் அணிக்கு நடிகர் சங்கத்தை தாரைவார்த்துக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்?

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சமரசப் பேச்சுக்கு அழைத்தால்கூட நான் போக மாட்டேன் என்று சொன்னதாக வதந்தியைப் பரப்புகிறார்கள். இந்த விஷயத்தில் முதல்வர் பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். சாதி, மொழி, இனத்தை வைத்து நடிகர் சங்கத்தைத் துண்டாட முடியாது '' என்றார்.


No comments:

Post a Comment