ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் அமைந்துள்ள 155 வருடப் பாரம்பரிய எம்.ஆர் அரசு சமஸ்கிருதக் கல்லூரியில் இப்போது படிப்பது மூன்றே மாணவர்கள் தான்! அவர்களுக்கு ஆசிரியராக இருப்பவர் கல்லூரி முதல்வரான ஸ்வப்னா ஹைந்தவி என்பவர் மட்டுமே. இக்கல்லூரி சமஸ்கிருதத்தில் பட்டப்படிப்பு வழங்கும் மிகச்சில கல்லூரிகளில் ஒன்றாகும்.
1860ம் ஆண்டில், விஜயநகரப் பேரரசர்களால் உருவாக்கப்பட்ட சமஸ்கிருதப் பள்ளியும் கல்லூரியும், 1950- ம் ஆண்டு இந்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் 2004- ம் ஆண்டு சமஸ்கிருத உயர்நிலைப் பள்ளி எனவும், எம்.ஆர் அரசு சமஸ்கிருதக் கல்லூரி எனவும் பிரிக்கப்பட்டது. தற்போது சமஸ்கிருதப் பள்ளி, 371 மாணவ மாணவிகளையும், 13 ஆசிரியர்களையும் கொண்டு சீராக இயங்கி வரும் நிலையில், கல்லூரிதான் பரிதாப நிலையில் உள்ளது.
1860ம் ஆண்டில், விஜயநகரப் பேரரசர்களால் உருவாக்கப்பட்ட சமஸ்கிருதப் பள்ளியும் கல்லூரியும், 1950- ம் ஆண்டு இந்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் 2004- ம் ஆண்டு சமஸ்கிருத உயர்நிலைப் பள்ளி எனவும், எம்.ஆர் அரசு சமஸ்கிருதக் கல்லூரி எனவும் பிரிக்கப்பட்டது. தற்போது சமஸ்கிருதப் பள்ளி, 371 மாணவ மாணவிகளையும், 13 ஆசிரியர்களையும் கொண்டு சீராக இயங்கி வரும் நிலையில், கல்லூரிதான் பரிதாப நிலையில் உள்ளது.
ஐந்து வருட ஒருங்கிணைந்த (இண்டர்மீடியட் + டிகிரி) படிப்பை வழங்கும் இக்கல்லூரியில், சமஸ்கிருதம் முதன்மைப் பாடமாகவும், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய கூடுதல் மொழிப் பாடங்களும் கற்றுத்தரப்படுகின்றன. ஒரு வருடத்திற்கு 30 மாணவர்கள் வரை சேரக்கூடிய இந்த பட்டப்படிப்பை தேர்ந்தெடுக்க எவரும் முன்வருவதில்லை. அதனால் 2003 லிருந்து கல்லூரி கட்டடம் பழுது பார்க்கப்படாமல், பெய்ண்ட் அடிக்கப்படாமல் சிதிலமடைந்து கிடக்கிறது.
”ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. பத்து வருடத்திற்கு முன்னர் 20 மாணவர்களைக் கொண்டிருந்த கல்லூரி, போன வருடம் ஐந்தாகவும், இந்த வருடம் மூன்றாகவும் குறைந்து அழிந்துகொண்டே வருகிறது. இன்னும் பல்வேறு படிப்புகளை இணைத்து இதை மேம்படுத்தலாம். ஆனால் யாரும் முன்வரவில்லை” என்று அலுத்துக் கொண்டார் கல்லூரியின் நிர்வாக அதிகாரியான பி ராமா ராவ்.
அங்கு படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களிடம் இது பற்றி கேட்ட போது, "அருகாமையில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தினருக்கும் கீழான நிலையில் உள்ளவர்கள். எனவே அவர்களின் நிலையை மேம்படுத்தும் தொழில்சார் படிப்புகளை தேர்ந்தெடுப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்" என்றார்கள்.
2004-ம் ஆண்டிலிருந்து இக்கல்லூரியின் முதல்வராகவும், 1999-ம் ஆண்டிலிருந்து ஆசிரியராகவும் திகழும் ஸ்வப்னா ஹைந்தவியிடம் பேசிய போது, “இந்த பாரம்பரியமிக்க மொழியைப் பயிற்றுவிக்கும் எங்களுக்கு அரசிடம் இருந்து எந்த வித உதவியும், அங்கீகாரமும், முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. அரசே ஊக்குவிக்கவில்லை என்றால் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை ஒரு சமஸ்கிருதக் கல்லூரியில் சேர்க்க ஆர்வம் காட்ட மாட்டார்கள்” என்றார்.
விஜயநகர இணை ஆட்சியர் எஸ்.டி.அனிதாவிடம் இது குறித்து கேட்ட போது, “எங்கள் பார்வைக்கு அக்கல்லூரியை மேம்படுத்தக் கூறி இதுவரை எந்தவித முன்மொழிதல்களும் வரவில்லை” என்பதோடு முடித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment