சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Aug 2015

செல்வந்தன் (ஸ்ரீமந்துடு) - படம் எப்படி?

நாம மட்டும் சந்தோசமா வாழ்ந்தா போதாது. நம்மைச் சுத்தி இருப்பவர்களும் சந்தோசமா இருக்கணும்" என்று நினைக்கும் ஹீரோ, தன் சொந்த ஊர் வறட்சியில் இருப்பதை அறிந்து உதவி செய்யப்போகையில் அங்கு நடக்கும் ஆக்ஷ்ன், காமெடி, காதல் கலந்த அன்லிமிடெட் ஆந்திரா மீல்ஸ் தான் ஸ்ரீமந்துடு. தமிழில் செல்வந்தன்.
கோடீஸ்வரர் ஜெகபதிபாபுவின் ஒரே மகன் ஹர்ஷா (மகேஷ்பாபு). அப்பாவோட பிஸினஸை கவனிக்க மகேஷ்பாபுவை அழைக்கிறார் தந்தையான ஜெகபதிபாபு. ஆனால் பணம், ஆடம்பரம் என்று எதிலும் நாட்டமில்லாமல் இருக்கிறார் மகேஷ்பாபு.

அந்த நேரத்தில் ஸ்ருதியை கண்டதும் காதல். ஸ்ருதி படிக்கும் காலேஜிலேயே மகேஷ் சேர்கிறார். ஒரு கட்டத்தில் மகேஷ் பணக்காரர் எனத் தெரிந்ததும் ஸ்ருதி அவரிடமிருந்து விலகிச் செல்கிறார். காதலைச் சொல்ல வரும் மகேஷிடம், "முதல்ல உன்னுடைய சொந்த ஊர் எதுன்னு தெரியுமா? பணம் வந்ததும் சொந்த ஊரையே மறந்தவர் உங்க அப்பா" என கூறி மகேஷின் கிராமத்தைப் பற்றிக் கூறுகிறார் ஸ்ருதி. 
உடனே தன்னுடைய பூர்வீக கிராமத்திற்குக் கிளம்புகிறார். அங்கு சம்பத் செய்யும் அராஜகத்தால் ஊரே மோசமான நிலையில் உள்ளது. மொத்த கிராமத்தையும் நான் தத்து எடுத்துக் கொள்கிறேன் என அதற்கான வேலைகளில் இறங்குகிறார் மகேஷ், அதைத் தடுக்கும் சம்பத்தை வென்று தன் ஊரை எப்படிக் காப்பாற்றுகிறார்? என்பதுதான் படம்.

ஆடம்பரமான அப்பாவாக ஜெகபதிபாபு, எளிமையாக வாழ ஆசைப்படும் மகனாக மகேஷ்பாபு. தெலுங்கு படத்திற்கே உரிய அனைத்து சாராம்ஸங்களும் நிறைந்த க்ளிஷே படம் தான் ஸ்ரீமந்துடு. குறைந்த காட்சிகளில் மட்டும் வந்தாலும் அம்மாவாக தன்னுடைய கதாப்பாத்திரத்தில் நிறைகிறார் சுகன்யா. 

படம் முழுக்க மகேஷ்பாபு ராஜ்ஜியம் தான். அலட்டிக் கொள்ளாத ஆக்ஷன், ஓவர் ஆக்ஷன் செய்யாத நடிப்பு எனப் பின்னியிருக்கிறார். ஆனால் அந்த இறுக்கமான முகம் சற்று சலிப்பையும் தருகிறது.
பிஸ்னஸை பார்த்துக் கொள்ளவா என அழைக்கும் தந்தையிடம் "உங்க அப்பாவுடைய விவசாயத்தையே நீங்க பண்ணல, அப்போ நீங்க பண்ற பிஸ்னஸையே செய்ய என்ன ஏன் கூப்பிடறீங்க" என தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி விவாதிப்பது, தன் போக்கில் ஒரு பயணமாக சொந்த ஊருக்குப் பயணிப்பது என மகேஷ் கதாபாத்திரம் சுவாரஸ்யம்.
மகேஷ்பாபுவிற்கே உரிய ஸ்பெஷல் சண்டைக் காட்சிகள். அவருக்கே உரிய ஸ்டைலில் அனைவரையும் பின்னிப்பெடலெடுக்கிறார்.  அனல் அரசுவின் சண்டைக்காட்சிகள். மதியின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு ஃப்ரேமும் அத்தனை கச்சிதமாக இருக்கிறது.

தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் பின்னணி இசை மாஸ் டெம்போ ஏற்றுகிறது, தெலுங்கில் ஹிட்டடித்த பாடல்கள் தமிழில் ஜொலிக்கவில்லை. அனைவரையும் கதாபாத்திரத்திற்கு ஏற்றதுபோல கச்சிதமாக நடிக்கவைத்திருக்கிறார் இயக்குநர் கோரட்டல சிவா. 

படத்தின் முடிவில், தன் சொந்த ஊரைவிட்டு வெளியேறி நகரத்தில் வாழும் அனைவரும் கொஞ்சம் தங்கள் கிராமங்களை நினைத்துப் பார்த்தால் எல்லோருமே நலமாக வாழலாம், வளர்ச்சி பெறலாம் என்ற சின்ன மெசேஜுடன் முடித்திருக்கிறார் இயக்குநர் கொரட்டலா சிவா. கொஞ்சம் நினைத்துப் பார்க்கலாமே?


No comments:

Post a Comment