சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Aug 2015

தோனியின் பிராண்ட் வேல்யூ

ந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி உலகளவில்  மதிப்புமிகுந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர். தோனியின் பிராண்ட் வேல்யூவால்  இந்தியாவின் பிரபல நிறுவனங்கள் அனைத்துமே அவரை வைத்து விளம்பரம் செய்ய துடித்துக் கொண்டிருக்கின்றன. தோனியின் ஆண்டுவருமானம் 31 கோடிரூபாய் என்றால் அதில் 27 கோடி  விளம்பரம் மூலம் வருவாயாக கொட்டுகிறது.

தோனியின் பிராண்ட் வேல்யூமிக்க வீரர். அதிக விளம்பரங்களில் அவர்தான் தோன்றுகிறார் என்பதை குறிக்கும் வகையில் பிரபல வணிகப்பத்திரிகை ஒன்று தோனியை 'விஷ்ணு' போல சித்தரித்து அட்டைப்படம் வெளியிட்டது. அதில் அவரது கையில் காலணியும் இருந்தது .
தோனியின் இந்த புகைப் படம் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாககூறி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சமூக சேவகர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி வேணுகோபால் கவுடாவிடம் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதி, '' தோனி போன்ற பிரபலங்களுக்கு மக்களின் மத உணர்வுகள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் தெரிந்திருக்க வேண்டும். பிரபலங்கள் பணத்துக்காக பின்விளைவுகள் பற்றி யோசிக்காமல் விளம்பர ஒப்பந்தங்களில் ஈடுபடுகிறார்கள்'' என்று வேதனை தெரிவித்தார். 

தோனி தரப்பில் ஆஜரான வக்கீல் பணம் வாங்கிக் கொண்டு இப்படி நடிக்கவில்லை என்று பதிலளித்தார். வழக்கு விசாரணை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.



No comments:

Post a Comment