சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Aug 2015

மரத்துக்கும் மரத்துக்கும் கல்யாணம்!

ஞ்சாவூரில் பரபரப்பாக பேசப்படுகிறது அந்த திருமணம். பெரிய வீட்டுத்திருமணம் என்ற நினைக்கிறீர் களா....? இல்லை, ஊரே வியக்கும் வகையில் பிரமாண்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் அந்த திருமணத்தில் மணமகன் அரசமரம், மணமகள் வேப்பமரம்.
வரும் ஞாயிறன்று நடக்க உள்ள இத்திருமணத்தில் கலந்துகொள்ள, உறவினர்களாய் தயாராக இருக்கிறார்கள் பக்தர்கள்.

என்னதான் நடக்கிறது..? என களத்தில் இறங்கிய நம்மையும் ஆச்சர்யம் பற்றிக்கொண்டது. தஞ்சாவூர், கரந்தை குளத்துமேட்டு தெரு,  வடவாற்றங்கரை படித்துறையில் அமைந்துள்ளது விநாயகர் கோவில். அங்கு அரச மரமும், வேப்பமரமும் ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படும். அந்த மரங்களுக்குத்தான் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

திருமண விழா கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான கண்ணகியிடம் பேசினோம். 

“சுமார் நாற்பது வருஷத்துக்கு முந்தி, எங்க முன்னோர்கள் இந்த இரண்டு மரத்தையும் வைத்தார்கள். நாங்க 250 குடும்பங்களுக்கு மேல் இங்கு வசிக்கிறோம். இதற்கு இப்ப உள்ள தலைமுறை ஒன்றும் செய்தது இல்லை. அதனால் எங்க பகுதியில் உள்ள மக்களுக்கு ஒரே பிரச்னைகளாகவே இருக்கு. அது மட்டும் இல்லாமல் பல ஆண்கள், பெண்களோட திருமணங்கள் தடைபட்டுக்கிட்டே இருக்கு. 

பெண்கள் குழந்தை பாக்கியமும் இல்லாமல் இருக்காங்க. இந்த மரங்களுக்கு திருமணம் செய்து வைத்தால் இந்த குறைகள் தீரும்னு சில பெரியவர்கள் சொன்னார்கள். அதனால் ஊரே கூடி திருமண ஏற்பாட்டை செய்கிறோம்” என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், “எங்க வீட்டுல ஒரு திருமணம் எப்படி நடக்குமோ அப்படிதான் செய்கிறோம். நகர் முழுக்க ப்ளக்ஸ் வைத்துள்ளதுடன், 500 பத்திரிக்கைகள் அடித்து உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து வருகிறோம். அது மட்டும் இல்லாமல் திருமணத்தை நடத்தி வைக்க புரோகிதரையும் அழைத்துள்ளதுடன்,  நாதஸ்வரம் மேளத்துக்கும் சொல்லியிருக்கோம். 

பெரிய வீட்டு திருமணம் போல் சிறப்பாக மூன்று நாட்கள் நடப்பதுடன், மரத்துக்கு ஒரு உருவகத்தை ஏற்படுத்தி, ஊர்வலம் எல்லாம் வைத்து, சீர்வரிசை எடுத்து, மணமக்களுக்கு (மரத்தைதான்) புது துணி உடுத்தி, ஆயிரம் பேர்களுக்கு சாப்பாடும் போடுவோம்.
ஸ்டுடியோகாரங்ககிட்ட சொல்லி போட்டோவும் எடுத்து, ஊரே கூடி இந்த திருமணத்தை செய்கிறோம். இதுவரை ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பணமும் செலவு செய்ய திட்டமிட்டிருக்கிறோம்” என்றார் கல்யாண வீட்டாருக்கே உரிய பரபரப்போடு.
அதேசமயம், "வேப்பமரத்தில் பால் வடிவதை சாமி என கும்பிடுவது, மரத்துக்கு திருமண செய்து வைப்பது என்பதெல்லாம் மூட நம்பிக்கைகள். இந்த காலத்திலும் இப்படி அறியாமையில் உழல்கிறார்களே...!" என்கிறார்கள் உள்ளுர் திராவிடர் கழகத்தினர்.



No comments:

Post a Comment