சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Aug 2015

மாயமான இந்தோனேஷிய விமானம் மலையில் மோதி நொறுங்கியது: பாகங்கள் கண்டுபிடிப்பு!

 54 பேருடன் திடீரென மாயமான விமானம், மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்றும் அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் இந்தோனேஷிய போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.


இந்தோனேஷியாவின் ஜெயபுரா நகரில் உள்ள சென்தானி விமான நிலையத்தில் இருந்து பப்புவா மாகாணத்தில் உள்ள ஒக்சிபில் நகருக்கு நேற்று ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. திரிகானா விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான ஏ.டி.ஆர். 42–300 ரக விமானத்தில் ஊழியர்கள், 5 குழந்தைகள் உட்பட 49 பயணிகள் என மொத்தம் 54 பேர் பயணம் செய்தனர்.

பப்புவா பிராந்தியத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு மேலே அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அதனுடன் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டு அந்த விமானம் மாயமானது. இதையடுத்து, இந்தோனேஷிய தேடுதல் மற்றும் மீட்புக்குழுவினர் மாயமான விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அந்த விமானம் இந்தோனேஷியாவின் பப்புவாவில் ஒக்பேப் என்ற மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விழுந்ததாகவும் அதன் பாகங்களைக் கண்டெடுத்துள்ளதாகவும், அந்நாட்டு விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் சுப்ரசெத்யோ தெரிவித்துள்ளார். கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகங்களை அதிகாரிகள் பரிசோதித்து வரும் நிலையில், அதில் பயணம் செய்தவர்கள் பற்றிய தகவல் வெளியாகாததால் அச்சம் ஏற்பட்டு உள்ளது.



No comments:

Post a Comment