சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Aug 2015

ஆனந்தனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி: அவர் மீதான புகார் என்னாச்சு?

தமிழக வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் இன்று இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.


சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். அப்போது, தமிழக வனத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.எஸ்.எம்.ஆனந்தன். பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானதைத் தொடர்ந்து மீண்டும் முதல்வராக அவர் பதவியேற்றார்.


இதைத் தொடர்ந்து அமைச்சரவை புதிதாக மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, வனத்துறை அமைச்சராக இருந்த எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு மீண்டும் பதவி வழங்கப்படவில்லை.

அவருக்கு மீண்டும் பதவி கிடைக்காமல் போனதற்கு பெண்மணி ஒருவர்தான் காரணம் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இது தொடர்பாக ஜெயமணி என்ற பெண் ஜூனியர் விகடனுக்கு கடந்த மே மாதம் அளித்த பேட்டியில், "வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம் இருந்துச்சு. அப்போ, அமைச்சர் மேல கார்டனுக்கு நிறைய புகார் போயிட்டு இருந்துச்சு. அந்தப் புகார் எல்லாம் அம்மா கவனத்துக்குப் போகாம இருக்க கார்டன்ல இருக்குற ஒருத்தரை அட்ஜெஸ்ட் செய்யணும்னு மிரட்டினார். நான் அதுக்கு ஒத்துக்கலை. அதனால என்னை அடிச்சு சித்ரவதை செஞ்சார். போற இடத்துல எல்லாம் என்னை அவமானப்படுத்தினார். எல்லாத்துக்கும் மேல என்னை கட்சியில இருந்து நீக்கவும் செஞ்சுட்டார். சேர்ந்து பிசினஸ் செய்யலாம்னு என்கிட்ட ஒரு கோடி ரூபாயை வாங்கிட்டு ஏமாத்திட்டார்” வெளிப்படையாகவே தெரிவித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், சட்டமன்றம் தொடங்கி கார்டன் வரை ஆனந்தன் மீது நேரில் சென்று புகார் அளித்தார், ஜெயமணி. அமைச்சருக்கு, ‘400 கோடி ரூபாய்க்கு சொத்து இருக்கிறது. அந்தப் பட்டியலைக்கூட வெளியிட தயார்’ என ஜெயமணி கூறிய ஒவ்வொரு புகாரும் ஆனந்தனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இது ஒரு புறம் இருக்க, உட்கட்சியில் ஆனந்தனுக்கு எதிராகக் கிளம்பிய புயல்களும் ஒரு காரணம் என்றும் கூறப்பட்டது. 

இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு பிறகு ஆனந்தனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில் வரும் 9ஆம் தேதி மாலை 3 மணிக்கு அமைச்சராக ஆனந்தன் பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.



No comments:

Post a Comment