சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Aug 2015

'' அதிருஷ்டவசமாக உயிர் தப்பினேன்''! துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பித்த வாசிம் அக்ரம் பேட்டி

துப்பாக்கி சூட்டில் இருந்து அதிருஷ்டவசமாக உயிர் தப்பியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீசுவதில் வலலவருமான வாசிம் அக்ரம் தற்போது இளம் பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்காக நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க வாசிம் அக்ரம் நேற்று தனது காரில் போய்க் கொண்டிருந்தார்.

  கார்சியா என்ற இடத்தில்  வாசிம் அக்ரம் கார் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் திடீரென அக்ரம் கார் மீது மோதியது. அதில் இருந்து கீழே இறங்கிய ஒருவர் வாசிம் அக்ரம் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்று விட்டார்.
இந்த தாக்குதல் குறித்து அக்ரம் கூறுகையில், ‘'எனது கார் மீது ஒரு கார் மோதியது. தப்பிக்க முயற்சித்த அந்த காரை நான் தடுத்து நிறுத்தினேன். அப்போது அதில் இருந்து இறங்கிய நபர் திடீரென துப்பாக்கியால் எனது காரை நோக்கி சுட்டார். தொடர்ந்து என்னை நோக்கியும் சுட ஆரம்பித்தார்.
நான் அதிர்ஷ்டவசமாக தப்பினேன்.  இதுவரை எனக்கு தனிப்பட்ட முறையில் எந்தவித மிரட்டலும் வந்தது கிடையாது. என்னை நோக்கி சுட்டது யார் என்பதை போலீஸ்தான் கண்டுப்பிடிக்க வேண்டும்.''

தற்போது 49 வயதான வாசிம் அக்ரம் 104 டெஸ்ட் போட்டியில் விளையாடி 414 விக்கெட்டும், 356 ஒருநாள் போட்டியில் ஆடி 502 விக்கெட்டும் வீழ்த்தியவர். ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து வருகிறார்No comments:

Post a Comment