சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Aug 2015

இளையராஜாவுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை!

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இசையமைப்பாளர் இளையராஜா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு 73 வயதான இளையராஜாவுக்கு இருதய பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


இளையராஜா, கடந்த வெள்ளிக்கிழமை தனக்காக பிரத்யேக இணையதளம் ஒன்றை தொடங்கி வைத்தார். அன்று இரவு, அவருக்கு திடீரென மூச்சுத்திணறலால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை கண்டறிந்தனர். இதை தொடர்ந்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, ஆஞ்சியோ பிளாஸ்ட் என்ற சிகிச்சை இளையராஜாவுக்கு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

தற்போது இளையராஜா உடல் நலம் தேறி வருவதாகவும், சில நாட்களில் முழு நலத்துடன் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:

Post a Comment