சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Aug 2015

கல்பனா சாவ்லா விருதை வென்ற பெண் லாரி டிரைவர்!

ஆறுவருடங்களாக லாரி ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு  கல்பனா சாவ்லா விருதை கொடுத்து கௌரவித்துள்ளது தமிழக அரசு. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு அருகிலிருக்கும் கள்ளிப்பட்டியைச்  சேர்ந்த பெண் ஜோதிமணிதான் அந்த விருதைப் பெற்றிருப்பவர். விருது வாங்கிய செய்தி அறிந்ததும் உறவின் கூட்டம் அதிகரித்திருக்கிறது அவரது வீட்டில். உறவுகளின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கும் அவரைத் தொடர்பு கொண்டோம்.  " இன்னைக்கு  நான் ரொம்ப பிஸி. உங்களைச் சந்திக்க முடியாது"  என அவர் கூறியதால் அலைபேசியில் அவருடன் பேசினோம்.
சென்னிமலையில் பிறந்த ஜோதிமணியின் தந்தையும் சகோதரரும் லாரி ஓட்டுனர்கள். இவரைத் திருமணம் செய்த கௌதமனும் லாரி ஓட்டுனர்தான். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ஆண்குழந்தைக்கு 10 வயதும், பெண் குழந்தைக்கு 8 வயதும் ஆகிறது. 

திருமணம் முடித்த கையோடு அதிக நேரம் கணவர் லாரியில் சென்றுவிடுவார். மாற்று டிரைவர் கிடைக்காததால் ரொம்பவும் சிரமமாக இருந்தது. அதனால் நாமும் இந்த வேலையைக்  கற்றுக்கொண்டால் என்ன என யோசித்த நான் எனது கணவரிடம் இதுகுறித்துப்  பேசினேன். அவரும் கற்றுக்கொடுத்தார். 6 வருடங்களுக்க்கு முன்பு நான் முழுமையாக லாரி ஓட்ட கற்றுக்கொண்டேன். இப்போது நானும் எனது கணவருமே எங்களது லாரியை எடுத்துக்கொண்டு குஜராத் வரை போயிருக்கிறோம் என்கிறார்.

இவ்வளவு தூரம் செல்லும்போது எங்கேயாவது விபத்தில் சிக்கியிருக்கும் வாகனங்களைப்  பார்த்து ஏன் இந்த தொழிலுக்கு வந்தோம் என நினைத்திருக்கிறீர்களா என்றோம். நிச்சயமாக இல்லை அவர்களைப்  பார்த்து பரிதாபப்படுவேன். கவனமாக வாகனத்தை இயக்கினால் பெரும்பாலும் விபத்தே இல்லாமல் ஓட்ட முடியும். பெரும்பாலும் கவனக்குறைவால் மட்ட்டுமே விபத்துக்கள் நடக்கிறது என்கிறார். வடநாட்டு உணவு இவர்களுக்கு ஒத்து வராது என்பதால் உணவு தயாரிப்பிற்கான பொருட்களை லாரியிலேயே எடுத்து சென்று விடுவார்களாம். தேவைப்படும்போது சமைத்து சாப்பிட்டு விட்டு செல்வதை வழக்கமாக்கிக்கொண்டிருக்க்கிறார்கள். 

களைப்பே இல்லாமல் தொடர்ந்து 14  மணி நேரம் வரை லாரியை ஓட்டிச்சென்றிருக்கிறாராம் ஜோதிமணி. ஆரம்பத்தில் என்னை எல்லோரும் எப்படி பார்த்தார்களோ தெரியாது. இன்று தமிழக அரசு கொடுத்த விருதுக்குப்பிறகு எல்லோருமே என்னை பாராட்டுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத்  தருகிறது என்கிறார். வேலைக்கு செல்லும்போது தனது மாமியாரிடம்  குழந்தைகளை விட்டுச்  சென்றுவிடுவாராம். 



No comments:

Post a Comment