சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Aug 2015

சசி பெருமாள் உடலில் ரத்தம் இருக்க காரணம் என்ன?

து விலக்கு வேண்டுமென்று  போராடிய சசி பெருமாள், செல்போன் டவரில் ஏறி 5 மணி நேரத்திற்கு மேலாக நின்றுள்ளார். சுமார் 200 அடிக்கும் உயரமான இடமென்பதால் இயல்பாகவே ஆக்சிஜன் அளவு குறைவாகத்தான் இருக்கும்.

வெயில் அதிகமான நேரத்தில் அவரை ஹீட் ஸ்ட்ரோக் தாக்கியிருக்கிறது. 5 மணி நேரத்திற்கு மேலாக எந்த உணவும் இல்லாமல் அவ்வளவு உயரத்தில் அவர் இருந்துள்ளார். இதனால் சர்க்கரையின் அளவு குறைந்திருக்கும். அதுவும் சர்க்கரை நோய் இருந்தால், பாதிப்பு அதிகமா இருந்திருக்கும். 

சர்க்கரை அளவு குறைந்தால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். அப்போது மாரடைப்புக்கு முன்னதாக பித்தம் நுரையீரலுக்கு வரும் மூச்சு குழாயை அடைத்து விடும். இதனால் மாரடைப்பு ஏற்படலாம். அந்த சமயத்தில் வயிற்றில் இருந்து வந்த பித்தம் ரத்த வாந்தியாக வெளியேறும்.
அப்படியே சசி பெருமாள் மயங்கியிருக்கலாம். ரத்த வாந்தி காரணமாக சட்டையில் ரத்தம் சிந்தியிருக்கிறது. இப்படிதான் சசி பெருமாளின் மரணம் நேரந்திருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


No comments:

Post a Comment