சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Aug 2015

இன்ப அதிர்ச்சியில் இருக்கிறேன்: ரஜினியுடன் ஜோடி சேரும் ராதிகா ஆப்தே பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடியாக நடிப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன் என்றும், இந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து வெளியே வர கொஞ்ச நாளாகும் என்றும் நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
 

'லிங்கா' படத்துக்கு பின் சில மாதங்கள் ஓய்வில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது புதுபடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ரஞ்சித் இயக்குவதாகவும், கலைப்புலி தாணு தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாதா கேரக்டரில் ரஜினிகாந்த் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. இதில் ராதிகா ஆப்தேவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இவர் ஏற்கனவே தமிழில் 'டோனி', 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

ராதிகா ஆப்தே ரஜினியின் ஜோடியாக நடிக்க உள்ளார் என்பதை இதுவரை  உறுதிப்படுத்தப்ட வில்லை. ஆனால், தற்போது ஆங்கில நாளிதழுக்கு ராதிகா ஆப்தே அளித்த பேட்டியில், ரஜினிகாந்துடன் நடைப்பது குறித்து உறுதிபடுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அந்த நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த இன்பதிர்ச்சியில் இருந்து வெளியே வர கொஞ்ச நாள் ஆகும். ரஜினியை விடவும் வேறு யாரும் பெரிது என நான் நினைக்கவில்லை. இயக்குநர் ரஞ்சித்தும் மிகவும் திறமையானவர். இது நிஜமானதில் நான் மிகவும் ஆச்சரியமடைந்துள்ளேன். ரஜினியைச் சந்திப்பதிலும் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

இது எனக்கு  கிடைத்துள்ள மிகவும் அரிய வாய்ப்பு. இதுபோன்ற படங்களுக்குப் பலத்த போட்டி இருக்கும். எனவே ரஜினியுடன் ஜோடியாக நடிப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். கதை மிகவும் வித்தியாசமானது. என்னுடைய கதாபாத்திரமும் பலமாக இருக்கும். சும்மா நடனமாடிவிட்டுச் செல்வதை விடவும் நடிக்க வாய்ப்புள்ள ஒரு படம். அப்படி இருந்திருந்தாலும் இந்தப் படத்தில் நடித்திருப்பேன். ரஜினியுடன் ஒரு படத்தில் நடிப்பதே அபாரமானது. என்னுடைய கதாபாத்திரமும் நல்ல இயக்குநரும் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியாக அமைந்துள்ளது" என்றார்.No comments:

Post a Comment