சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Aug 2015

ஓரினச் சேர்க்கை மற்றும் வன்முறைகளைக் கற்றுக்கொடுக்கும் சிறை! அதிரவைக்கும் ஆங்கிலப்படம்

நமக்கு வாழ்வின் மீது நம்பிக்கை குறையும் போது எல்லாம் நண்பர்களைத் தான் அதிகமாக தேடிச் செல்கிறோம்.நல்ல நண்பர்கள் இருப்பது வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கையை தருவதாக இருக்கிறது .வேறு எதையும் விட,எந்த உறவையும் விட நண்பர்களுக்கு முக்கியத்துவம் தருவதையே நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம்.அந்த வகையில் நண்பர்கள் ,நம்பிக்கை என்பதை மையமாக வைத்து வெளிவந்த படங்களில் உலக சினிமா ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்த படம் தி ஷஷாங்க் ரிடெம்ப்சன்
ஸ்டீபன் கிங்கின் கதையை அடிப்படையாக வைத்து பிராங்கின் இயக்கத்தில் வெளியான.இப்படத்தின்  கதை முழுவதும் சிறைச்சாலையிலே நடக்கிறது. ஆண்டி வங்கியில் அதிகாரியாக பணிபுரிபவன். தனது மனைவியையும்,அவளின் கள்ளக்காதலனையும் கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான் .உண்மையில் அவன் கொலை செய்யவில்லை .சாட்சிகள் ஆண்டிக்கு எதிராக இருப்பதால் ,வேறு வழியின்றி தண்டனையை அனுபவிக்கும் சூழலுக்கு ஆளாகிறான்..சிறையில் கைதிகளுக்கு வேண்டிய பொருட்களை வெளியே இருந்து வாங்கிக் கொடுக்கும் ரெட்டின் அறிமுகம் ஆண்டிக்கு கிடைக்கிறது .ரெட்டும் சிறை தண்டனையை அனுபவித்து வருபவன் தான். விரைவிலேயே ரெட்டும் ஆண்டியும் நெருங்கிய நண்பர்களாகி விடுகிறார்கள். நண்பனின் உதவியோடு ஆண்டி சிறையிலிருந்து எப்படி தப்பித்து செல்கிறான் என்பதுதான் மீதிக்கதை. 


சிறைச்சாலை, குற்றவாளிகளை சீர்திருத்த உருவாக்கப்பட்ட ஒரு இடம் என்று  சொல்கிறோம் .ஆனால் குற்றம் செய்யாத ஒருவனை கூட சிறை வாழ்க்கை குற்றவாளியாக மாற்றிவிடுகிறது .ஆண்டி எந்த குற்றமும் செய்யாதவன் ,சந்தர்ப்ப சூழ்நிலையால் கைது செய்யப்பட்டு இரண்டு ஆயுள் தண்டனையை அனுபவிக்கிறான் .வெளியே வங்கியில் வேலை செய்தபோது நேர்மையாக இருந்தவன்,சிறைக்கு வந்த பிறகு அவனின் அறிவை சிறை அதிகாரிகள் தங்களின் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதிலே பயன்படுத்துகிறார்கள். ஆண்டியும் வேறு வழியில்லாமல் சிறை அதிகாரிகளின் வரி ஏய்ப்பு ,கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதில் ஈடுபடுகிறான்.மேலும் வார்டனின் நிதி ஆலோசகராக வேறு ஆண்டி இருக்கிறான்.
வார்டனின் கருப்பு பணத்தை ஆண்டி தான் உருவாக்கிய ஒரு கற்பனை பாத்திரத்தில் முதலீடு செய்கிறான்,அது மிகப்பெரிய அயோக்கியத்தனம் என்று  தன் நண்பனிடம் ஆண்டி கூறுகிறான். மேலும் ஆண்டி தன் நண்பன்  ரெட்டிடம் நான் வெளியே இருக்கும் போது கூட நேர்மையாக இருந்தேன்,உள்ளே வந்த பிறகு சிறை என்னை அயோக்கியனாக மாற்றிவிட்டது  என்கிறான். உண்மையில் சிறை குற்றவாளிகளை உருவாக்குகிறதா? இல்லை சீர்திருத்துகிறதா? என்ற கேள்விகள் பார்வையாளனின் மனதில்  ஆழமாக  எழுகின்ற இடம் அது.

நாம் தினசரிகளில் இந்த செய்தியை கடக்காமல் போவதற்கு வாய்ப்புகள் இன்றைய சூழலில் மிக குறைவு .கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி,கள்ளக் காதலியுடன் சேர்ந்து மனைவியை, கொலை செய்த கணவன்,40 வயதான பெண் குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம். திருமணமான இரண்டே நாளில் விவாகரத்து பெற்ற பெண்.காதல் மனைவியை கொன்ற காதலன். இதுபோன்ற குற்றங்களால் சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிகளின் உலகம் என்னவாக இருக்கும் என்பதை ஷஷாங்ரெடெம்ப்சன் தோலுறித்து காட்டியிருக்கிறது. 

ஆண்டி இருபது வருடங்கள் சிறை தண்டனையை அனுபவித்த பிறகு ஒன்றை உணருகிறான் .மிகுந்த வருத்ததுடன் அதை தன் நண்பன் ரெட்டிடம் பகிர்ந்து கொள்கிறான். ரெட் நான் தான் என் மனைவியை கொலை செய்து விட்டேன்.அவள் என்னிடம் எப்போதுமே ஏன் மூடிய புத்தகமாக ,கடினமாக இருக்கிறீர்கள் என்று கேட்டுகொண்டே இருப்பாள். அதை நான் கண்டு கொள்ளவே மாட்டேன்.உண்மையில் அவள் சொன்னது மாதிரி தான் நான் நடந்து கொண்டேன். ரெட் அவளை உண்மையிலே நான் நேசித்தேன். எவ்வளவு அழகானவள்.அதற்கு ஆண்டியிடம் ரெட் நீ கொலை செய்யவில்லை .ஒருவேளை நீ நல்ல கணவனாக நடந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பான்.

தன் தவறை உணர்தல்,அதை முழுமனதுடன் ஏற்றுகொள்தல் ,அதற்காக வருந்துதல் இதுதான் ஒருவனுக்கு மனசாட்சி கொடுக்கும் தண்டனையில் இருந்து விடுதலை அடைய ஒரே வழி .தன் தவறை உணர்ந்த பிறகே ஆண்டி சிறையில் இருந்து தப்பிக்கிறான்.தன் மனைவியின் இயல்புகளை ஏற்றுகொள்ளாமல் நல்ல கணவனாக நடந்து கொள்ளாமல் இருந்தற்காக தான் தண்டிக்கத் தகுந்தவன் என்று உணர்கிறான்

அதே மாதிரி தன் கணவனின் இயல்புகளை   ஏற்றுகொள்ளாமல் வேறுஒருவனை நாடி சென்றதால் தான் ஆண்டியின் மனைவியும் கொலை செய்யப்படுகிறாள் .இங்கே தவறுகள் செய்தவர்கள் அனைவரும் அதற்கு தகுந்த தண்டனையை பெறுகிறார்கள்.வரி ஏய்ப்பு செய்த வார்டன் தன்னை தானே சுட்டுக் கொள்கிறார். கைதியை கொன்ற அதிகாரி மிகுந்த அவமானத்துடன் சிறைக்கு இழுத்து செல்லப்படுகிறார்.
பரஸ்பர புரிதலோ,அன்போ,விட்டுகொடுத்தலோ,இல்லாத போது மனித உறவுகளில் விரிசல் விழுகிறது. ஒருவன் வாழ்கிறான். இன்னொருவன் தனிமைப்படுத்தப்படுகிறான். அந்த விரிசலை சரி செய்ய யாரும் அதிகமாக விரும்பாமல் வேறு ஒரு உறவை தேடி செல்லவே விரும்புகின்றனர் .ஆனால் அதுவும் நிலைத்திருப்பதில்லை. 

தனிமைச் சிறையின் கொடுமைகள் ,ஓரினச்சேர்க்கை ,அதிகாரிகளின் அயோக்கியத்தனங்கள் ,எப்போதாவது கிடைக்கும் சின்ன சின்ன சந்தோசங்கள் ,கைதிகளுக்கிடையேயான வன்முறை   என சிறை வாழ்வின் அவலங்களை அழகாக பதிவு செய்வதோடு சிறையில் பல வருடங்களாக கைதிகள் எப்படி தினம் தினம் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்களோ அதே மாதிரி தான் நாமும் வெளியே ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதையும்  ஆண்டியும் அவன் நண்பனும்  எப்படி நம்பிக்கையுடன் அந்த வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைந்தார்களோ  அதே போல் நாமும் விடுதலை அடைய வேண்டுமென்றும் இப்படம் சொல்லாமல் சொல்கிறது.  

ஆண்டி நல்ல கணவனாக நடந்து கொள்ளாததால். தன்  மனைவியை இழந்து தனிமையில் வாடியது போல,ஆண்டியின் மனைவி கணவனை துறந்து வேறு ஒருவனை நாடி கொலையுண்டது போல.....இன்றும் நிறைய பேர்.....




No comments:

Post a Comment