சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Aug 2015

அது போன மாசம்... யுவராஜிடம் சிக்கி ஒரே ஓவரில் 6 சிக்சர் விட்டு கொடுத்த பிராட் (வீடியோ)

ங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பிராட், நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 15 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்... 

                              
பிராட் தந்தை கிறிஸ் பிராடும் ஒரு கிரிக்கெட் வீரர்தான். இதனால் பிராட்டின் ரத்தத்திலேயே கிரிக்கெட் கலந்துள்ளது. 

தந்தையை போலவே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்த பிராட். 17 வயது வரை தொடக்க வீரராகத்தான் இருந்தார். அதற்கு பின்தான் பந்துவீச்சுக்கு மாறினார். 

கடந்த 2007ஆம் ஆண்டு,  டி20 உலகக் கோப்பை போட்டியில் யுவராஜ்சிங், பிராட் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். இவரது ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்து யுவராஜ் துவம்சம் செய்ய நொந்து போனார் பிராட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் பிராட் 2 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2011ஆம் ஆண்டு இந்திய வீரர்கள் தோனி, ஹர்பஜன், பிரவின் குமார் ஆகியோர் விக்கெட்டுகளையும், 2014ஆம் ஆண்டு இலங்கை வீரர்கள் சங்ககாரா, சண்டிமால், சமிந்தா இரங்கா ஆகியோர் விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை ஸ்லெட்ஜிங் செய்து பிராட் சர்ச்சையில் சிக்கினார்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஜெஃப்ரி பாய்காட், பிராட்டை மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் கேரி சோபர்சுக்கு இணையான ஆல்ரவுண்டர் என்று ஒப்பிட்டார். 

இதற்கு முன் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து, 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதே பிராட்டின் சிறந்த பந்துவீச்சாக இருந்தது. நியூசிலாந்துக்கு எதிராக அவர் இந்த சாதனையை படைத்திருந்தார். 

இந்திய பந்துவீச்சாளர் வருண் ஆரோன் வீசிய பந்தில், ஒரு முறை பிராட்டின் மூக்கு உடைந்து போனது.

லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் இரு முறை 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பிராட். இதே மைதானத்தில் இங்கிலாந்து அணி 102 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது, பிராட் 169 ரன்கள் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டுள்ளார். 

கடந்த 2013ஆம் ஆண்டு பிராட்டுக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டில் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்டுகளை வீழ்த்திய பிராட் 5 அரை சதங்களையும் அடித்தார்.



No comments:

Post a Comment