சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Aug 2015

இந்தியாவில் சுத்தமான நகரங்களில் திருச்சிக்கு 2வது இடம்; சென்னைக்கு 61 வது இடம்!

டந்த ஆண்டு டெல்லி செங்கோட்டையில் சுதந்திரதின தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின்  ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் உள்ள நகரங்களின் தூய்மை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டதில் இந்தியா முழுவதும் உள்ள தூய்மை நகரங்களில் மைசூர் முதல் இடத்தையும், இரண்டாவது இடத்தை திருச்சி மாநகராட்சி பெற்றுள்ளது.
வெளியிடங்களில் மனிதக்கழிவுகள், திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை அகற்றுதல் போன்றவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட இந்த திட்டங்கள் வரிசையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் கீழ் தேர்வு செய்து வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் ஒரு காலத்தில் சிங்காரச்சென்னை என அழைக்கப்பட்ட சென்னைக்கு 61வது இடமும், மதுரைக்கு  20வது இடமும், கோவை  196வது இடமும் கிடைத்துள்ளது.

இந்த விருது இந்தியாவில் தூய்மையான நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் முதல் நூறு நகரங்களில், 39 இடங்கள் தமிழகம், பெங்களூரு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட  தென் மாநிலங்களில் உள்ள நகரங்கள் உள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் உள்ள 27 மாநில தலைநகரங்களில்  புதுடெல்லி 16 இடத்திலும், திருவனந்தபுரம் 8 இடத்திலும், பெங்களூரு 7 இடத்திலும், புதுச்சேரி 23 வது இடத்திலும் மற்றும் ஹைதராபாத் 275 இடத்திலும் உள்ளன.

இதில் சந்தோசப்பட வேண்டிய விஷம் என்னவெனில், தூய்மையான முதல் 10 நகரங்களில் திருச்சி 2வது இடத்தை பிடித்துள்ளது. கேரளாவிலுள்ள கொச்சி 4 இடத்தையும், திருவனந்தபுரம்  8வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விருதுகள், 2014-15 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் உள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள ஒரு லட்சத்துக்கும்  அதிகமான மக்கள்தொகை கொண்ட 476  நகரங்களில், வெளியிடங்களில் மனிதக்கழிவுகள், திடக்கழிவு மேலாண்மை, சாக்கடைகள், குடிநீர் தரம், தொற்று நோய்கள் போன்ற பல அளவுகோள்களின் அடிப்படையில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தால் ஆய்வு நடத்தப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் 61 நகரங்களிலும், மேற்குவங்கத்தில் 60 நகரங்களிலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 43 நகரங்களிலும், மத்திய பிரதேசத்தில்  32 நகரங்களிலும், குஜராத் மாநிலத்தில் 30 நகரங்களிலும், ஆந்திராவில் 30 நகரங்களிலும், தமிழ்நாட்டில் 29 நகரங்களிலும், ராஜஸ்தான் மாநிலத்தில் 28 நகரகங்ளிலும், பீகார் மாநிலத்தில் 27 நகரங்களிலும், கர்நாடகாவில்  26 நகரகளிலும், ஹரியானாவில் 20 நகரங்களிலும், பஞ்சாப்பில் உள்ள  16 நகரங்களிலும், தெலங்கானாவில்  11 நகரங்களிலும், ஒடிசா, ஜார்கண்ட் மாநிங்களில் 10 நகரகங்ளிலும், சத்தீஸ்கரில் 9  நகரங்களிலும், கேரளா, உத்தரகண்ட், வடகிழக்கு மாநிலங்களில் தலா 6  நகரங்களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் முதல் இடம் மைசூரும், 2வது திருச்சியும் பிடித்துள்ளது. 

கடைசி 100 இடங்களில் உள்ள 74 நகரங்கள் வடமாநிலங்களை சேர்ந்தவையே. இதில் தென்மாநிலங்களை சேர்ந்த 2 நகரங்களே உள்ளன. குறிப்பாக கடைசி 476வது இடத்தை மத்தியபிரதேச மாநிலத்தின் டாமோ பெற்றுள்ளது.

இந்தியாவின் தூய்மையான நகரங்களில் 2வது இடத்தை திருச்சி பெற்று இருக்கும் செய்தி பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.No comments:

Post a Comment