தனிமனித தாக்குதல் என்று வியாக்கியானம் பேசும் ஜெயலலிதா, பிறரை இழித்தும், பழித்தும் பேசுவது மட்டும் நியாயமா? என கேள்வி எழுப்பியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்பது எந்த வகையில் நியாயம்? என்றும், இதைதான் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவினரின் வன்முறை வெறியாட்டங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. அதனால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளும், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மாநகரில் நேற்று போக்குவரத்து ஸ்தம்பித்துப்போனது.
ஜனநாயக நாட்டில் கருத்துரிமையும், பேச்சுரிமையும் அனைவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாலும், நடைபெறுகின்ற சம்பவங்களை பார்க்கும்போது ஜனநாயக நாட்டில் இருக்கிறோமா? சர்வாதிகார ஆட்சியில் இருக்கிறோமா? என்கின்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. அரசியல் ரீதியான கருத்து விமர்சனத்தில் தனிமனித தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு. ஆனால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவோ சட்டமன்றத்திலேயே என்னை மது அருந்திவிட்டு வருகிறேன் என்று தனிப்பட்டமுறையில், தரக்குறைவாக விமர்சித்துப் பேசி பதிவு செய்துள்ளார்.
பல அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதே பொருள்படும்படி சட்டமன்றத்திலேயே என்னை தனிப்பட்ட முறையில் மிகமோசமாக பேசியபோது, அதை பார்த்துக்கொண்டும், ரசித்துக்கொண்டும் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்ததும் நியாயமானதா? தனக்கென வரும்போது தனிமனித தாக்குதல் என்று வியாக்கியானம் பேசும் இவர், பிறரை இழித்தும், பழித்தும் பேசுவது மட்டும் நியாயமா? ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்பது எந்த வகையில் நியாயம்? இதைதான் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை பற்றி கருத்து கூறினால் அவர்களின் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதனால்தான் போராட்டம் என்ற பெயரில் இந்த வன்முறை வெறியாட்டம் நடைபெறுவதாக கூறுகிறார்கள். இதுபோல நீங்கள் பிற கட்சித்தலைவர்கள் மீது தொடுக்கின்ற தனிமனித தாக்குதலுக்காக, தேமுதிக உள்ளிட்ட ஒவ்வொரு கட்சியின் தொண்டர்களும், அதிமுகவினரைப் போலவே சட்டத்தை கையில் எடுத்தால், காவல்துறை இதுபோல் வேடிக்கைப் பார்க்குமா?
அதிமுகவினர் போக்குவரத்து நெரிசல் மிக்க அண்ணாசாலையில் காவல்துறையின் பாதுகாப்போடு ஊர்வலமாக வந்து உருவ பொம்மையை எரிகின்றனர். கட்சி அலுவலகத்தை தாக்குகின்றனர். அதற்கு பதிலடியாக ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்பவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்துவது எந்த வகையில் நியாயம்.
கடந்த 6ஆம் தேதி பூரணமதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, அகிம்சைவழி போராட்டமான மனித சங்கிலி போராட்டம் தேமுதிக சார்பில் நடத்தப்பட்டது. அதற்கு காவல்துறை அனுமதி மறுத்து, அந்த போராட்டத்தில் ஈடுபட்ட என்னையும், தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை கைது செய்தது. சென்னையில் என்னுடன் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது காவல்துறை தடியடி என்ற பெயரில் கொலைவெறிதாக்குதல் நடத்தி, சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அதேபோல் கல்லூரி மாணவர்களும் மதுவிலக்கு குறித்த போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்கள்மீதும் காவல்துறை கொலைவெறித் தாக்குதல் நடத்தியதோடல்லாமல், சுமார் பதினைந்து நாட்களுக்கு மேலாகியும் இன்று வரை அந்த மாணவர்களை அதிமுக அரசு சிறையிலேயே வைத்துள்ளது. அதேபோல் போராடிய மாற்றுத்திறனாளிகளை அழைத்து பேசக்கூட மனமில்லாமல், காவல்துறை இரவு நேரத்தில் அவர்களை நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளது.
இதுபோன்று கடுமையான, கேவலமான நடவடிக்கைகளை எடுக்கும் காவல்துறை, தற்போது அதிமுகவினர் நடத்தும் வன்முறை வெறியாட்டத்தின் மீது என்ன நடவடிக்கை எடுத்தது? எந்தவித போராட்டமானாலும் ஐந்து நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்கவேண்டும் என்ற விதிமுறையை கூறும் காவல்துறை, உடனுக்குடனே அதிமுகவிற்கு மட்டும் அனுமதி அளித்தது எப்படி? இதற்கு காரணமான உயர் அதிகாரி யார்?
கடந்த 14ஆம் தேதி கூறிய கருத்திற்கு 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் விடுப்பு எடுத்துக்கொண்ட அதிமுகவினர் 18, 19 ஆகிய தேதிகளில் யாருடைய கண் அசைவின் பேரில், இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். தற்போது நடைபெறும் இந்த பிரச்னைக்கு காரணமே, தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரியும் மதுவிலக்கு பிரச்னையை மக்களிடமிருந்து திசை திருப்பவே அதிமுக இதை கையில் எடுத்துள்ளது.
சுய விளம்பரத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும், மக்கள் போராட்டமாக மாறியுள்ள மதுவிலக்கு பிரச்னையிலிருந்து தன்னை தற்காத்து கொள்ளவும், மக்களுக்கு தன்மீது பரிதாபம் ஏற்பட வேண்டும் என்கின்ற நோக்கில்தான், அதிமுக இந்த பிரச்னையை ஊதி ஊதி பெரிதாக்குகிறது.
ஒட்டுமொத்த தவறையும் தன்மீது வைத்துக்கொண்டு பிறர்மீது பழியை சுமத்துவது ஏற்புடையது அல்ல. சட்டம் என்பது ஆணாக இருக்கட்டும், பெண்ணாக இருக்கட்டும், ஆளுங்கட்சியாக இருக்கட்டும், எதிர்கட்சியாக இருக்கட்டும் அனைவருக்கும் சரிசமமானது என்பதை காவல்துறை நிரூபிக்கவேண்டும்.
அதிமுகவின் இதுபோன்ற மலிவான போராட்டத்தால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவதை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். காவல்துறை ஏவல்துறையாக இருந்து, இனியும் வேடிக்கை பார்க்காமல் தன்கடைமையை செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய தமிழக அரசே, சட்டம் ஒழுங்கை பொருட்படுத்தாமல், வன்முறை மூலம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, சீரழிப்பது நியாயம் தானா? இதைத்தான் “மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்” என்பார்கள். எனவே அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தன் கட்சித்தொண்டர்களை கட்டுப்படுத்தி, இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்களில் அவர்கள் ஈடுபடாமல், தடுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment