குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் பெயரில் செயல்படும்' பசுமை 'திட்டத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் ‘மொட்ட சிவா கெட்ட சிவா‘ மற்றும் 'நாகா' ஆகிய இருபடங்களை நடித்து இயக்கவுள்ளார். இந்த படங்களை வேந்தர் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படங்களின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவின் போது ராகவா லாரன்சுக்கு படத்தை நடித்து இயக்குவதற்கு அட்வான்சாக ஒரு கோடி ரூபாயை வேந்தர் மூவிஸ் மதன் வழங்கினார்.
அந்த தொகையை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் செயல்படும் பசுமை திட்டத்துக்காக ராகவா லாரன்ஸ் நன்கொடையாக வழங்கினார். ‘பசுமை‘ அமைப்பு ஏழை குழந்தைகளின் கல்விக்காக போராடி வருவதோடு, மரக்கன்றுகளை நடும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.
No comments:
Post a Comment