சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Aug 2015

ராம் கோபால் வர்மா வெளியிட்ட ராஜமௌலியின் அதிர வைக்கும் அடுத்த பட்ஜெட்?

பாகுபலி’ படத்தின் பட்ஜெட்டும், பிரம்மாண்டமுமே இன்னமும் சினிமா ரசிகர்களை ஆச்சர்யத்தில் இருந்து வெளியே கொண்டுவரவில்லை. மேலும் படத்தில் எதிர்பாரா முடிவை வைத்து அடுத்த பாகத்திற்காக அனைவரையும் காத்திருப்பில் இருக்க வைத்துவிட்டார் இயக்குநர் ராஜமௌலி. 
இதுவரை இல்லாத வகையில் இந்திய சினிமாவிலேயே ஒரு படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இந்த அளவிற்கு எதிர்பார்ப்புகள் உருவானது இந்தப் படத்திற்குத்தான் இருக்கும். இந்நிலையில் ராஜமௌலி இதன் இரண்டாம் பாகத்தின் வேலைகளில் மும்முரமாக ஈடுப்பட்டுள்ளார். 

ஏற்கனவே 40 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டன. அடுத்தக் கட்ட படப்பிடிப்புகள் செப்டம்பர் மாதத்தில் துவங்கப்பட உள்ளன. இந்நிலையில் ராம் கோபால் வர்மா ராஜ மௌலியின் அடுத்த படத்தின் பட்ஜெட் குறித்து பகிர்ந்துள்ளார். 
பாகுபலி 2ம் பாகம் படத்தையடுத்து மற்றொரு கதையொன்றை உருவாக்கியுள்ளாராம் ராஜமௌலி. அந்த படத்தை உருவாக்க 950கோடி செலவாகுமாம். மேலும் கதை 3000கோடிக்கு ஈடாகும் எனக் கூறியுள்ளதாக ட்விட்டரில் கூறியுள்ளார். 
படத்தின் கதையைக் கேட்டு தான் ஆச்சர்யத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா. 950 கோடி எனில் பாகுபலி போல் 4 படங்களை எடுத்துவிடலாம் என்கிற நிலையில் அப்படி என்ன கதை, ஏன் அவ்வளவு செலவு என்றே தோன்றுகிறது. ஒருவேளை தனது கனவுப் படமான மகாபாரதம் கதையை எடுக்க இருக்கிறாரா ராஜமௌலி என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment