சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், நந்திதா தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘புலி’. படத்திற்கு இசை தேவி ஸ்ரீபிரசாத். நேற்று படத்தின் பாடல்கள் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இப்போதுவரை இணையத்தில் ட்ரெண்டாகி கலக்கி வருகிறது புலி படத்தின் பாடல்கள்.
இரண்டு வேடத்தில் விஜய் நடித்துள்ள இப்படம் அரசர் காலம், மற்றும் நிகழ்காலம் என இரண்டு காலகட்டமாக உருவாகியுள்ளதாம். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை மிகப்பெரிய அளவில் ரிலீஸ் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது.
உலகம் முழுவதுமாக சுமார் 3500 திரையரங்குகளில் ‘புலி’ வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டின் மிகப்பெரிய மார்கெட் உள்ள இடத்திலேயே இத்தனை திரையரங்குகளில் ஒரு படம் ரிலீஸ் செய்யப்படுவதில்லை. அப்படி ஒருவேளை ‘புலி’ படம் 3500 திரையரங்குகளில் வெளியானால் தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக அதிக திரைகள் கண்ட படம் விஜய்யின் ‘புலி’ யாக இருக்கும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment