சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Dec 2015

'அவர் ஒபாமா ஆகட்டும்... நீங்க முதலமைச்சர் ஆகிடுங்க...!' - 'கொங்கு' ஈஸ்வரன் கட்சியின் அடேங்கப்பா பிளான்

தருமபுரியில் நடந்த கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் வடக்கு மண்டல ஒற்றுமை மாநாட்டில் பேசிய மாநாட்டில் பேசிய திரைப்பட இயக்குனர் விஜயகிருஷ்ணராஜ்,  அமெரிக்காவில் நான் தங்கியிருந்த இடத்திற்கு ஒருமுறை ஈஸ்வரன் வந்தபோது,  அமெரிக்காவில் வசிக்கும் நம் சமூகத்தலைவரை அறிமுகப்படுத்தினேன். அவரைப்பார்த்து,  'இவ்வளவு செய்றீங்க... நீங்க நினைச்சா நிச்சயம் ஒபாமா ஆகலாம்' னு ஈஸ்வரன் சொன்னார் என்று பேசியது  தொண்டர்களை ஆச்சரியப்படுத்தியது. 

ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் வடக்கு மண்டல ஒற்றுமை மாநாடு தருமபுரியில் நேற்று நடைபெற்றது.
”நம்மிடம் சம்பளத்திற்கு வேலைசெய்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் போன்றவர்கள் தமிழக முதலமைச்சர் ஆகும் போது நாம ஆக முடியாதா...? என ஆரம்ப கட்ட பேச்சாளர் ஒருவர் கொளுத்திவிட்டுப் போக, அடுத்தடுத்து வந்தவர்களும், "தமிழகத்திற்கு தலைமை தாங்கக் கூடிய சக்தி கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சிக்குத்தான் இருக்கிறது" என பேசி புல்லரிக்க வைத்தனர் தொண்டர்களை.
மாநாட்டில் பேசிய திரைப்பட இயக்குனர் விஜயகிருஷ்ணராஜ்,  " மாவட்டச் செயலாளர்  பேசும்போது, போலீஸாரின் அடாவடிகளைப் பற்றி பொங்கினார். பஸ்ல ஒரு அழகான பொண்ணு இருந்தாதான் இடிப்பாங்க. அரசியலைப் பொறுத்தவரைக்கு நாம அழகான பொண்ணு. அதான் இப்படி இடிக்கிறாங்க. இடிக்கட்டும்... எவ்வளவு வேண்டுமானாலும் இடிக்கட்டும். இடிக்க இடிக்கத்தான் நாம உயர முடியும். ஈஸ்வரன் எதற்காக தருமபுரியில் காலடி எடுத்து வச்சிருக்கார் தெரியுமா.? தருமபுரியில தொழிற்சாலைகளை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக.

அமெரிக்காவில் நான் தங்கியிருந்த இடத்திற்கு ஒருமுறை ஈஸ்வரன் வந்தபோது,  அமெரிக்காவில் வசிக்கும் நம் சமூகத்தலைவரை அறிமுகப்படுத்தினேன். அவரைப்பார்த்து,  'இவ்வளவு செய்றீங்க... நீங்க நினைச்சா நிச்சயம் ஒபாமா ஆகலாம்' னு ஈஸ்வரன் சொன்னார். 

அதற்கு நான் ஈஸ்வரனிடம், 'அப்படினா நீங்க முயற்சி பண்ணா தமிழக முதலமைச்சர் ஆகிடலாம்'னு சொன்னேன். நாம மத்தவங்க மாதிரி முதல்வர் வேட்பாளர்னு அறிவிச்சுக்கிட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்ம சமுதாயம் சாதிச்ச பிறகுதான் சொல்லும். தமிழகத்துக்கு தலைமை தாங்கக்கூடிய தகுதி கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கே இருக்கிறது" என்று பரபரப்பை இன்னும் கூட்டினார்.
இறுதியாக பேசிய ஈஸ்வரன் “ இது பிரியாணி பொட்டலத்துக்கும், நூறு ரூபாய்க்கும் கூடிய கூட்டமல்ல. உணர்வுக்காக கூடிய கூட்டம். அமெரிக்காவில் நம் சமுதாயத் தலைவரிடம் 'ஒபாமா ஆகலாம்'னு சொல்லலை. நம் சமுதாயத்துல இருந்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்ல போட்டியிடணும்னுதான் சொன்னேன். அதை வச்சி  நம்ம டைரக்டர் என்னை வாருகிறார். 

'நதிகளை இணைப்போம்' என்று சொல்லித்தான் மோடி பிரதமரானார். ஆனால் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தமிழக பா.ஜ.க தலைவர்களும் இதைப்பற்றி வாய்திறக்க மாட்டார்கள். பா.ஜ.கவினரே  தயவுசெய்து வெட்டிப்பேட்டிக் கொடுக்காதீர்கள். ஆக்கப்பூர்வமாக பேசுங்கள். நதிநீர் இணைப்பில் என்ன நடக்கிறது என்று வெளிப்படையாக அறிவியுங்கள்” என்றவர், உள்ளூர் அரசியலுக்கு வந்தார். 

காங்கிரஸில் விஜயதாரணியும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் அடித்துக்கொள்கிறார்கள். இளங்கோவன்... நீங்க பி.சி.ஆர் கேசை விஜயதாரணி, குஷ்பு  யார் மேல போட்டாலும் சரி,  நாங்கள் முன் ஜாமீன் எடுத்துக்கொடுப்போம். விஜயதாரணிக்கு முன் ஜாமீன் எடுத்துக்கொடுக்க நாங்கள் ரெடி. ஆரம்பத்துல மாவட்டச்செயலாளர் பேசும்போது நம்முடைய ஃப்ளெக்ஸ் கிழிக்கப்பட்டதைப் பற்றி ஆதங்கப்பட்டார். 

என்னடா ஒரு ப்ளெக்ஸ்க்கு போய் இப்படி பேசுறாரே என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள் விஜயதாரணிக்கும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கும் சண்டை வந்ததற்கான காரணமே ப்ளெக்ஸ்தான். ப்ளெக்ஸ் பிரச்னையால் ஒரு தேசியகட்சியிலே கலவரம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தி நடிகர் அமீர்கான் பேசிவிட்டாராம் அதனால் இப்போதுதான் எல்லோரும் சகிப்புத்தன்மையைப் பற்றி பேசுகிறார்கள். இவ்வளவு நாட்களாக சகிப்புத்தன்மை என்பது இல்லையா..? அமீர்கான் நடித்த பி.கே படத்தை பலபேர் பார்த்திருக்கமாட்டீர்கள். ஒரு பெட்டியோடு போஸ் கொடுத்தார். உங்களை நாங்கள் ஒரு இந்தியனாகத்தான் பார்த்தோம். நாடாளுமன்றத்தேர்தலில் மோடிக்கு விழுந்த ஓட்டு 17 கோடி மட்டும்தான் இந்தியாவில் மொத்தம் உள்ள  130 கோடி பேரில் 17 கோடி பேர்தான் மோடிக்கு வாக்களித்தார்கள். அத்தனை இந்துக்களுமா மோடிக்கு வாக்களித்தார்கள். 

இதுவரை அரசியல் சரித்திரத்தில் எந்த ஒரு கட்சித்தலைவரும் இன்னொருவருக்கு புதிய கட்சி ஆரம்பித்துக் கொடுத்ததாக சரித்திரம் கிடையாது. ஆனால், அதை ராமதாஸ் செய்துகொண்டிருக்கிறார். டம்மி கட்சியை ஆரம்பித்துவிட்டு நம்முடைய கட்சியை உடைக்கப்பார்க்கிறார். அதை நிறுத்திக்கொள்ள வேண்டும்"  என்று முடித்தார்..


No comments:

Post a Comment