கனமழை வெள்ளத்தால் பெரும் வருமான இழப்புக்கு ஆளான சென்னை ஐ.டி.நிறுவனங்கள் எதிர்காலத்தில் சென்னையிலேயே தங்களால் நீடிக்க முடியுமா என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் ஐ.டி.ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் தொடங்கி இம்மாதம் முதல் வாரம் வரை சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு,வெள்ளத்தில் மூழ்கின.

தாம்பரம்,முடிச்சூர்,சோழிங்கநல்லூர்,வேளச்சேரி,பெரும்பாக்கம்,தரமணி,துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி தவித்தன. பெரும்பாலான ஐ.டி.நிறுவனங்களின் தரைத்தளங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு, பெரும் சேதத்திற்கு உள்ளாகின. இதில், ராமபுரம் டி.எல்.எப். வளாகத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஐ.டி.நிறுவனங்கள் தற்போது வெள்ள பாதிப்பு குறைந்த பிறகும் என்ன செய்வது என்று தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பல ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு கணினிவழி சேவை செய்து வருமானம் ஈட்டிவந்த நிறுவனங்கள், வெள்ளம் கொடுத்த இழப்பில் இருந்து மீள முடியுமா என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
இவற்றில் முன்னணி நிறுவனங்களை தவிர, நடுத்தர நிறுவனங்கள் பெரும் வருமான இழப்பைச் சந்தித்துள்ளன. சென்னை வெள்ளத்தில் ஒரு வாரம் எந்த வேலையும் நடக்காத நிலையில், இந்தக் காலாண்டு வருமானம் பெரும் அடி வாங்கும் என்று பிரபல நிறுவனங்களான டாடா, விப்ரோ தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அவற்றின் பங்கு சந்தை நிலவரத்திலும் மாற்றம் ஏற்பட்டு பங்கு மதிப்பும் சரிந்தது. இதே போல, டேக் சொல்யூஷன்ஸ் போன்ற நடுத்தர சாப்ட்வேர் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பங்கு மதிப்பு ஒரு சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது.

சென்னையில், 450 ஊழியர்களுடன் இயங்கும் இந்த நிறுவனம், கனமழை வெள்ளத்தில் ஒரு வாரம் முழுக்க மூழ்கி இருந்ததால் ஊழியர்கள் பணிக்கு வரவே இயலவில்லை. வேலை படுத்து விட்டது. இதே போல பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஹெக்சாவேர் நிறுவனமும் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது.
சென்னையில் உள்ள இதன் கிளை அலுவலகம் மூலம்தான் உலக அளவில் 23% வருமானத்தை ஈட்டி வந்தது. வெள்ளத்தால் இப்போது அந்த வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிர்வாகம் திகைத்துப் போயுள்ளது.

ஏற்கெனவே,சில நடுத்தர நிறுவனங்கள் பெங்களூரு,கோவைக்கு மாற்றப்பட்டதால் அதன் பணிகள் ஓரளவே பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்சென்னை வெள்ளத்தால் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு ஐடி நிறுவனங்கள் வருமான இழப்பைச் சந்தித்து உள்ளதால், அவை எதிர் காலத்தில் சென்னையில் நீடிக்கலாமா என்று தீவிரமாக யோசித்து வருகின்றன.
No comments:
Post a Comment